உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

* ஜி. அர்ஜுனன், திருப்பூர்: 'நானோ, என் குடும்பத்தினரோ கட்சியில் எந்த பதவிக்கும் வரமாட்டோம்' என்று, பா.ம.க., ஆரம்பித்தபொழுது கூறிய அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இன்று, மகனுக்கு, கட்சி தலைவர் பதவி கொடுத்து ஆனந்தப் படுகிறாரே...அவருக்கு வயதாகி விட்டதல்லவா... ஞாபக மறதி நோய் வந்திருக்கும்... அதனால், தான் கொடுத்த வாக்குறுதியை மறந்திருப்பார் போலும்! ஆர்.எம். வடுகநாதன், வேதாரண்யம்: வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில், அரியானா, முன்னாள் முதல்வர், ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதே...சீன நாட்டைப் போல், நாமும், 36 மாதங்களுக்குள், இதுபோன்ற வழக்குகளை முடிக்க வேண்டும். ஊழல் வழக்குகளில், அங்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. சவ்தாலா வழக்கில், 12 ஆண்டுகளுக்கு பின்னரே சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது! * ஆர். சுப்புத்தாய், விருதுநகர்: கடந்த ஆண்டுகளை விட, 'நீட்' தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்துள்ளதே...மாணவர்கள், 'நீட்' தேர்வை எதிர்த்து போராடவில்லையே... அவர்கள் மனப்பக்குவம் உள்ளவர்கள்... தமிழகத்தில் மருத்துவ கல்லுாரிகள் நடத்தும் திராவிட கட்சியினர் தான் எதிர்க்கின்றனர்! ஆர். சேஷாத்திரி, சென்னை: தெருக்கள் பெயரில் ஜாதி பெயரை நீக்கப் போகிறதாமே அரசு... அதனால், ஜாதிகள் ஒழியுமா?கருணாநிதி சிலையை திறக்க வந்த துணை ஜனாதிபதியை வரவேற்று, அரசு விளம்பரம் கொடுத்திருந்தனர் பத்திரிகைகளில்... அதில், வெங்கையா 'நாயுடு' என்று தானே வெளியிட்டு இருந்தனர். ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தால், வெறும் வெங்கையா என்று குறிப்பிட்டு இருக்கலாமே! எஸ். ஹக்கிம், வத்தலக்குண்டு: உதயநிதி ஸ்டாலினை, துணை முதல்வராக்க வேண்டும் என, தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ஆனந்த தாண்டவம் ஆடுகின்றனரே...தி.மு.க.,வினர், கிராம பஞ்சாயத்து முதல் நகராட்சி வரையிலும் வாரிசு அரசியலை ஆரம்பித்து விட்டனரே... அதையும் தான் செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் நினைக்கிறார்... அதற்காகவே கட்சியினர், ஜால்ரா போட மறைமுகமாக ஏற்பாடு செய்திருக்கிறார் என எண்ணத் தோன்றுகிறது!ஆ. மாணிக்கம், பொள்ளாச்சி: 'பா.ம.க., நிர்வாகிகள், சரியாக கட்சி பணியாற்றாததால் தான் ஆட்சியை பிடிக்க முடியவில்லை' என்கிறாரே, அக்கட்சி நிறுவனர் ராமதாஸ்...அவர் நிறுவியது ஒரு ஜாதிக்கான கட்சி... மற்ற ஜாதியினர் ஓட்டுப் போடுவரா? இதில், நிர்வாகிகளை நொந்து கொள்வது, 'வேஸ்ட்!எம். முருகன், புதுச்சேரி: நான், தளராத ஊக்கம் உடையவனாக இருக்கிறேன்... எனக்கு என்ன நடக்கும்?உங்களுக்கு, செல்வமானது தானே தேடி வரும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !