உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

* எஸ். தேவராஜா, துாத்துக்குடி: செந்தில் பாலாஜி கைதால், கொங்கு மண்டலமே கொதித்துப் போய் இருப்பதாக, சபாநாயகர் அப்பாவு சொல்கிறாரே...கொங்கு மண்டலம் எல்லாம், 'கூலா'கத்தான் இருக்கிறது. அம்மண்டலத்தினர் எல்லாம், அ.தி.மு.க.,வினர் ஆச்சே!மு. நாகூர், சாத்தக்கோன்வலசை, ராமநாதபுரம்: 'நாட்டை ஆண்டதில் மோடியைப் போன்று மோசமான நிர்வாகம் யாரும் செய்ததில்லை...' என்று, சீமான் குற்றம் சாட்டியுள்ளாரே...உங்கள் நேரத்தை வீணடித்துக் கொண்டுள்ளீர்கள். இப்படியான, 'லெட்டர் பேட்' கட்சியினரின், அறிக்கை மற்றும் பேட்டிகளைப் பார்த்தும், படிப்பதிலும், 'டோண்ட் வேஸ்ட் யுவர் டைம்!' வி.சி. கிருஷ்ணரத்னம், செங்கல்பட்டு:'பூரண மதுவிலக்கு தமிழகத்தில் வெற்றி பெறாது...' என்று, காங்., கார்த்தி சிதம்பரம் சொல்வது சரியா?மிகச் சரியாக கூறியிருக்கிறார். பூரண மதுவிலக்கை கொண்டு வந்தால், 'டாஸ்மாக்' வாடிக்கையாளர்களின் ஓட்டு, தி.மு.க.,வுக்கு கிடைக்காமல் போய் விடும். அத்துடன், அரசு செலவுக்கு பணம் இல்லாமலும் போய் விடும்! வி. பானுமதி, சென்னை: என் வருமானத்திற்கு அதிகமாக செலவு செய்கிறேனே...தேவைக்கு மேல் செலவு செய்வது ஆடம்பரம். தேவைக்கு கூட செலவு செய்யாதது கருமித்தனம். தேவையின் அளவுக்கு செலவு செய்வது சிக்கனம்!* மா. கண்ணா, பாப்பான்குளம், தென்காசி: அரசியல்வாதிகள் உடல்நிலை பாதிக்கப்பட்டால், அரசு மருத்துவமனைக்கு செல்லாமல், தனியார் மருத்துவமனைகளை நாடுவது ஏன்?அவர்களுக்கு, அரசு மருத்துவமனைகளின் தரம் தெரிந்திருக்கிறது. கையில் காசு இல்லாதவர்களுக்கு, அரசு மருத்துவமனைகளின் தரம் தெரிந்தும், ஏதோ பிழைக்கலாம் என அங்கே செல்கின்றனர்!ஓ.என். ராமநாதன், மதுரை: கவர்னரை மாற்றக் கோரி, ம.தி.மு.க.,வினர், கையெழுத்து இயக்கம் நடத்துகின்றனரே... பலன் கிட்டுமா?முதல்வர் ஸ்டாலினே, இதில் கையெழுத்து போட மறுத்து விட்டார். இந்த கையெழுத்து இயக்கத்தில் என்ன பலன் கிடைத்து விடப்போகிறது. லெட்டர் பேடு கட்சியான, ம.தி.மு.க., தாங்கள் இன்னும் உயிருடன் இருப்பதை காட்டிக் கொள்ளவே, இதுபோன்ற இயக்கங்களை நடத்துகின்றனர்! எஸ். ராஜம், திருச்சி: தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாகி வருகிறதே...இதே போன்ற கேள்விக்கு ஏற்கனவே பதில் சொல்லியுள்ளேன். தமிழக மீனவர்கள், எல்லை தாண்டுகின்றனர். அதனால், கைதாகின்றனர். இதேபோல், குஜராத் மீனவர்கள், எல்லை தாண்டுவதால், பாகிஸ்தான் ராணுவத்தால் கைதாவது பற்றி படித்ததில்லையா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !