உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

எஸ்.கே. மகேந்திரவர்மன், சாலைப்புதுார்: 'டாஸ்மாக்' கடைகளுக்கு, வாரம் ஒருநாள் விடுமுறை விடுவதால், மது விற்பனை குறைந்து விடுமா?ம் ஹூம்... குறையவே குறையாது. மதுப் பிரியர்கள், விடுமுறை நாளுக்கு முந்தைய நாளே, மதுவை வாங்கி, 'ஸ்டாக்' வைத்துக் கொள்வரே! எம். மீனாட்சி, எட்டயபுரம்: எதிர்க்கட்சிகள், பாட்னா, பெங்களூரு என்று சந்தித்துக் கொள்கிறார்களே... ஏதேனும் பயன் இருக்குமா?பயன் ஒன்றும் இல்லை. அப்படியே, 2024 தேர்தலில் வெற்றி பெற்றாலும், பிரதமர் யார் என்ற போட்டியில், கூட்டணி உடைந்து விடும்! கே. நாராயணன், மதுரை: என் நண்பன் யாரையாவது குறை கூறிக் கொண்டே இருக்கிறானே... அவனை எப்படி திருத்துவது?திருத்தவே முடியாது. பிறரைக் குறை கூறும் உங்கள் நண்பருடன் இனியும் பழகாதீர்கள். மீறி பழகினால், அவரது தீய குணங்கள் உங்களுக்கும் வந்து விடும்!க. சரவணன், சென்னை: அறங்கள் செய்வதில் சிறந்தவர்கள் ஆண்களா, பெண்களா?சில அறங்கள் செய்வதில், ஆண்களை விட பெண்கள் தான் சிறந்தவர்களாக இருக்கின்றனர். அதிலும், அஹிம்சை தான் முக்கியமான ஒன்று!* கி. ராம், மதுரை: பணம் சம்பாதிக்க விரும்புகிறேன். அதற்கு என்னிடம் முதல் தகுதி என்னவாக இருக்க வேண்டும்?பல தகுதிகள் இருந்தபோதும், முதல் தகுதியாக, ஒழுக்கம் வேண்டும். பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக, ஒழுக்கத்தை விற்று விடக்கூடாது!ஜி. சண்முகம், மதுரை: மகத்தான செயல்களை செய்ய மனம் விரும்புகிறது... நான் என்ன செய்தால், அதை செய்ய முடியும்?முதலில் பொறாமையை கை விட வேண்டும்... பின்னர் மகத்தான செயல்களை செய்து விட முடியும்!எஸ். நாதன், நெல்லை: வாழ்க்கையில் நான் வெற்றி பெற வேண்டும் என, நினைக்கிறேன். என்ன செய்ய வேண்டும்?உண்மையின் பாதையில் செல்லுங்கள். தானாக கிடைக்கும் வெற்றி! * மு. வினாயகம், நெல்லை: திருப்தியான வாழ்க்கை என்று, எதைச் சொல்லலாம்?வெறுப்பில்லாத இதயம் வேண்டும்; வாடாத புன்னகை வேண்டும்; எவரையும் புண்படுத்தாத சொற்கள் வேண்டும். இதுதான் திருப்தியான வாழ்க்கை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !