உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்

*எம்.ராஜா, பண்ருட்டி: இந்த காலத்தில் கொடுத்தால் திரும்ப வராதது எது?கொடுத்த கடன் தான். இதில் சந்தேகமே வேண்டாம்!***** க.ரமேஷ், மத்வராயபுரம்: தலைவர்கள் பிறந்த நாள், இறந்த நாள் ஆகியவைகளுக்கு, அரசு விடுமுறை அவசியமா?சுதந்திர தினத்திற்கு கூட விடு முறை தேவையில்லை... அன்று தான் மற்ற நாட்களை விட, இரண்டு மணி நேரம் அதிகம் உழைக்க வேண்டும் என வாதிடும் கட்சியினன் நான். ஆண்டுக்கு, 10 நாட்களுக்கு மேல் அரசு விடு முறை அவசியம் இல்லை!**** ஏ.சித்தன், நெய்வேலி: வெளிநாட்டு மக்களும் ஜோசியம், ஜாதகம் பார்ப்பார்களா?ஆசிய கண்ட நாடுகளில், எல்லாவற்றிலு@ம ஜோசிய பைத் தியம் உண்டு! சீனாவில் அமோகம். ஐரோப்பா, ஆப்ரிக்கா, அமெரிக்கா கண்டங்களிலும் பல்வேறு முறைகள் நிலவுகின்றன. உலகில் யாருக்குத் தான் கஷ்டம், நெருக்கடி இல்லை. கஷ்டம் வந்ததும் மக்கள் நாடுவது, ஜோசியர்களைத் தானே!****டி.நரசிம்மன், ஆண்டாள்புரம்: சிலர் மற்றவர் பேசும் போது குறுக்கே புகுந்து தாமே பேசிக் கொண்டிருக் கின்றனரே...இன்று பலரிடமும் உள்ள கெட்ட பழக்கம் இது! பேசிக் கொண்டே இருப்பது எவ்வளவு பெரிய தண்டனையோ, அதை விட கொடியது இது! இப்படிப் பட்டவர்களைக் கண்டால் ஓடி ஒளிந்து கொள்வதே மேல்!**** கி.ராதிகா, பழவந்தாங்கல்: முன்னேற துடிக்கிறேன்... எனக்கு நானே, சார்ஜ் ஏற்றிக் கொள்ள ஒரு வாக்கியம் சொல்லுங்கள்... அதை என் மேஜை மீது எழுதி வைத்துக் கொள்கிறேன்!'போதும் மற்றவர்களை நம்பியது; இனி, என்னை நம்பி நான் நிற்பேன்!' இதை ஒரு ஸ்லோகம் போல் தினசரி ஜபியுங்கள்... யானை பலம் கிடைக்கும். அப்புறம் மளமளவென்று முன்னேறலாம்!****சா.கண்மணி, திருவல்லிக்கேணி: வேலை பளுவில் டென்ஷன் ஆகும் போது எப்படி சமாளிக்கிறீர்கள்?டென்ஷன் ஆவதில்லை; இதற்கு மிக உதவுவது திட்டமிடல். எது முதலில்... எதற்கு பிரியாரிட்டி... மாலையில் அல்லது நாளை பார்த்துக் கொள்ளலாம் என்பவை எவை என, ஒரு காகிதத்தில் எழுதிப் பாருங்கள்... பின்னர் டென்ஷனா, அப்படின்னா என்ன என்று கேட்பீர்கள்!**** தி.கண்ணம்மாள், அனுப்பானடி: பெரிய அறிவாளிகளும், விஞ்ஞானிகளும், அரசியல் தலைவர்களும், கிராமங்களில் தானே பிறக்கின்றனர்... என்ன காரணம்?அறிந்து கொள்வதில், தெரிந்து கொள்வதில் முன்னேறத் துடிப்பதில், தணியாத தாகம், கிராமத்தில் தான் இருக்கிறது. இந்த தேடல் தான் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கிறது. இன்று சென்னையில் வசிக்கும் முன்னேறியவர்கள் பலரும் வந் தேறியவர்கள் தான். மண்ணின் மைந்தர்கள் மீன் பிடிக்கின்றனர்; ரிக்ஷா இழுக்கின்றனர்!***** கா.குணசேகரன், சைதாப்பேட்டை: குடும்பத்தை குதூகலமாக்குவது கணவரின் வரு மானமா? மனைவியின் நிர்வாகத் திறனா?சந்தேகமே இல்லை, இரண்டாவது தான்! கணவர் எவ்வளவு கொடுத் தாலும், அதற்குள் கட்டு செட்டாக குடும்பத்தை நடத்திச் செல்லும் திறன், பெண்களிடம் மட்டுமே உண்டு! எங்கே தான் இந்த மேனேஜ்மென்ட் படிப்பை இவர்கள் படிக்கின்றனரோ!***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !