பிரபலமாகும் தானியங்கி பேருந்துகள்!
அரபு நாடுகளுள் ஒன்றான துபாயில், இனி ஓட்டுனர் இல்லாத பேருந்துகள், பயணிகளை ஏற்றிச் செல்ல போகின்றன. உலகில் உள்ள, 10 நிறுவனங்கள் போட்டி போட்டு, தானியங்கி பேருந்துகளை தயாரித்து வருகின்றன.இவைகளில், எந்தவித குறையும் இல்லாமல் இருக்கும், எந்த மாடல் பேருந்து தேர்வாகிறதோ, அதை போக்குவரத்துக்கு பயன்படுத்த இருக்கிறது. அடுத்த ஆண்டு முதல் இந்த பேருந்துகள், துபாய் நாட்டு சாலைகளில் ஓடப் போகின்றன.'இதனால், 4,000 ஓட்டுனர்கள் வேலை இழந்தாலும், ஏராளமான பணம் மிச்சமாகும்...' என, துபாய் போக்குவரத்து துறை, இந்த பேருந்துகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. — ஜோல்னாபையன்