தானாகவே பல் துலக்கும், டூத் பிரஷ்!
தினமும் காலையில் எழுந்து, பல் துலக்குவதற்கு, நம்மில் பெரும்பாலானோர், சோம்பல்படுவர். இதை, சரியாக புரிந்து வைத்துள்ள ஒரு வெளிநாட்டு நிறுவனம், பல் செட் வடிவில் சிறிய கருவியை கண்டுபிடித்து, அதற்கு, 'அமா பிரஷ்' என, பெயரிட்டுள்ளது. இக்கருவியை, பற்களில் பொருத்தினால் போதும்; 10 நொடிகளில், பற்களை நன்றாக துலக்கி விடும். அதற்கு பின், வாய் கொப்பளித்தால் போதும். இதன் விலை, 6,000 ரூபாய். முதல்கட்டமாக, ஆஸ்திரியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் விற்பனைக்கு வந்துள்ளது.இன்னும் சில மாதங்களில், நம் அனைவரின் குளியல் அறைகளிலும் இடம்பிடித்து விடும், அமா பிரஷ்.—ஜோல்னா பையன்.