உள்ளூர் செய்திகள்

அழகிய கேரள பாணி வீடுகள்!

கேரளாவில், நம்பூதிரி இன மக்கள் வாழும் வீடுகளை, 'மன' என்பர். ஒரு காலத்தில், பல ஏக்கர் நிலத்துக்கு சொந்தக்காரர்களாக இருந்த இந்த இன மக்கள் பலர், இன்று அந்த நிலங்களை இழந்து விட்டனர். படத்தில் காணப்படும் மன, 300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.முழுக்க முழுக்க வெட்டு கற்களாலும், விலை உயர்ந்த மரங்களாலும் கட்டப்பட்ட இந்த மனை, திருச்சூரிலிருந்து, 13 கி.மீ., தொலைவில் இருக்கும் சாத்தனுாரில் உள்ளது. இந்த மனையில் இப்போது யாரும் குடியிருக்கவில்லை.இதுபோன்ற வேறு மனைகளை, பல ஊர்களில் காணலாம். சிலர், இதுபோன்ற மனைகளை, சினிமா படப்பிடிப்புக்கு, வாடகைக்கு விடுவதுண்டு. ஏராளமான மலையாள படங்களில் இத்தகைய வீடுகளின் அழகை கண்டு ரசிக்கலாம்.— ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !