உள்ளூர் செய்திகள்

புல்லட் டாக்டர்!

படத்தில் இருப்பவர் பெயர், சந்திரா டோம். மருத்துவராக பணிபுரிகிறார். இவரை பார்ப்பவர்கள், 'புல்லட் டாக்டர் போகிறார்...' என்பர். சிறுமியாக இருந்தபோது, புல்லட் மீது ஆசை ஏற்பட்டது. மகளின் ஆசையை நிறைவேற்ற, நான்கு ஆண்டுகளுக்கு முன், புல்லட் வாங்கிக் கொடுத்தார், அப்பா.கேரள மாநிலம், பாலா என்ற ஊரிலிருந்து, தினமும், 30 கி.மீ., பயணித்து, கோட்டயம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு வருகிறார், சந்திரா.கேரளாவில் உள்ள பல சுற்றுலா மையங்களுக்கும் தனியாக செல்லும், சந்திரா, அடுத்ததாக,இமயமலைக்கு செல்லவிருக்கிறார்.ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !