கேமரா வாகனம்!
ராட்சத உருவம் கொண்ட இந்த கேமரா, ஒரு வாகனம் என்றால் நம்ப முடிகிறதா...ஆந்திராவை சேர்ந்த, சுதாகர் ரெட்டி, ஒரு வாகனப் பிரியர். வாகனங்களை, வித்தியாசமாக வடிவமைத்து அனைவரையும் வியக்க வைப்பவர்.ஐதராபாத் சார்மினார் பக்கத்தில் உள்ள பகதுார் புரா கிராஸ் ரோட்டில், 'சுதா கார் மியூசியம்' இயங்கி வருகிறது. இங்கு, விதவிதமான வடிவங்களில், கார்கள் இருக்கின்றன. இதுபோன்ற வித்தியாசமான செயல்களுக்காக, 'கின்னஸ்' சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார், சுதாகர்.ஜோல்னாபையன்