இவரை மறக்க முடியுமா?
பிரபல தபேலா கலைஞர், உஸ்தாது ஜாகீர் உசைன்; 64 வயதாகும் இவர், இன்றும் தபேலாவில், விரல்களால் வித்தை காட்டி, வியக்க வைக்கிறார். தன், 12வது வயதில், தந்தை உஸ்தாது அல்லாரகாவுடன் மேடையேறிய இவர், இன்றும் தன் விரல்களுக்கு ஓய்வு கொடுக்கவில்லை. 'என்னை தபேலா கலைஞர்களின் முதல்வன் என்று கூற வேண்டாம்; கலைஞர்களில் ஒருவன் என்று கூறுவதையே விரும்புகிறேன்...' என்கிறார் இந்த அற்புத கலைஞர்.— ஜோல்னாபையன்.