உள்ளூர் செய்திகள்

சாதிக்கும் பெண்கள்!

படத்தில் உள்ள, ராம்க்ருபா ஆனந்தன், 'மகேந்திரா அண்ட் மகேந்திரா' கார் உற்பத்தி நிறுவனத்தின், வடிவமைப்பு இலாகா தலைவியாக நியமிக்கப்பட்டுள்ளார். கார் வடிவமைப்பு துறையில், உயர் பதவியில், பெண்கள் இருப்பது அபூர்வம். உதாரணத்திற்கு, 'போர்டு' நிறுவனத்தின், மிமி வான்டர் மோலனை கூறலாம். 1993லேயே, 'போர்டு' காரின், வடிவமைப்பு பிரிவில் உச்சம் தொட்டவர். 1997ல், 'மகேந்திரா அண்ட் மகேந்திரா'வில் சேர்ந்தார், ராம்க்ருபா ஆனந்தன். இன்று, உச்சியை தொட்டு விட்டார்.நுாற்றாண்டு கண்ட பழைய நிறுவனமான, 'ஜெனரல் மோட்டார்' நிறுவனம், சென்னை பெண்ணான, திவ்யா சூர்ய தேவராவை, சமீபத்தில், முதன்மை அதிகாரியாக நியமித்துள்ளது. முன்பு, 'டாட்டா' நிறுவனங்களில் மற்றும் தொழிற்கூட பிரிவில் வேலை செய்ய, பெண்களை அனுமதிக்க மாட்டார்கள். 'டாட்டா ஸ்டீல்' நிறுவனத்தில் போராடி, தொழிற்கூட பிரிவில் இடம்பெற்ற பெருமை, சுதா நாராயணமூர்த்திக்கு உண்டு.இப்போது, 'டாட்டா மோட்டார்ஸ்' நிறுவனத்தில், தொழிற்கூட பிரிவில், 1,800 பெண்கள் வேலை செய்கின்றனர்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !