சார்லி சாப்ளின் வீடு!
மறைந்த நகைச்சுவை நடிகர், சார்லி சாப்ளின் இங்கிலாந்தில் பிறந்து, 40 ஆண்டுகள் அமெரிக்காவில் குடியிருந்தவர். இவர், புகழின் உச்சியில் இருந்தபோது திடீரென்று, சுவிட்சர்லாந்து நாட்டுக்கு குடியேறினார். ஆட்சியாளர்களை கிண்டல் செய்து, படம் எடுத்ததால், இவர் ஒரு, கம்யூனிஸ்ட் அபிமானி என்று முடிவு செய்தது, அமெரிக்க அரசு. ஒருமுறை படப்பிடிப்பு ஒன்றுக்காக இங்கிலாந்து வந்தவர், மீண்டும் அமெரிக்கா திரும்பினார், சாப்ளின். கப்பலில் பயணம் செய்தபோது, இவருடைய அமெரிக்கா பயணம் குறித்து விளக்கம் கேட்டிருக்கிறார், அமெரிக்க அட்டர்னி ஜெனரல். இதனால், கோபமடைந்த சாப்ளின், அமெரிக்கா செல்லாமல் சுவிஸ் நாட்டு, வெவேலி என்ற ஊருக்கு சென்று, இறுதிவரை அங்கேயே தங்கியிருந்தார். படத்தில் காணப்படுவது, சுவிட்சர்லாந்து நாட்டில், அவர் தங்கியிருந்த வீடு. — ஜோல்னாபையன்