கிறிஸ்துமஸ் பிட்ஸ்!
நெதர்லாந்தில், சாண்டா கிளாஸ், வட துருவத்திலிருந்து வர மாட்டார். மாறாக, ஸ்பெயினிலிருந்து வருவார். இவருக்கு, ஏழு உதவியாளர்கள்* 'ஹால்மார்க்' நிறுவனம் தான், 1915ல், முதன் முதலில், கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளை வெளியிட்டது. ஆண்டுதோறும், 300 கோடி கிறிஸ்துமஸ் அட்டைகள், அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன* சாண்டா கிளாஸ், விண்ணில் பறப்பது போன்ற படத்தை, வாஷிங்டன் இர்வீஸ் என்பவர் தான், முதலில் வரைந்தார்* வடக்கு பின்லாந்தில் உள்ள, சாண்டா கிளாஸ் போஸ்ட் ஆபிசில், ஒரு ஆண்டிற்கு, ஆறு லட்சம் கடிதங்கள் வருகின்றன. இதில், டிசம்பர் மாதம் மட்டும், தினமும், 30 ஆயிரம் கடிதங்கள் வருமாம். இவை, ஹெலிசிங்கி விமான நிலையத்திலிருந்து, விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகின்றன. இவற்றில், 12 மொழிகளில், 40 ஆயிரம் கடிதங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பதில் அனுப்பப்படுகிறது; பலருக்கு கூடுதலாக பரிசும் உண்டு.