உள்ளூர் செய்திகள்

வண்ணங்களும், எண்ணங்களும்!

நம்மைச் சுற்றி உள்ள சுவர், பொருட்கள் மற்றும் உடைகளின் நிறங்களும் நமக்குள் சில மாற்றங்களை ஏற்படுத்தும். சில நிறங்கள், நோய்களை நீக்கும். சில, நோய்களை அதிகப்படுத்தும். சில, கோபத்தை துாண்டும். சில, கோபத்தை குறைக்கும். இதை அடிப்படையாக வைத்து, 'க்ரோமோ தெரபி' என்ற வண்ண மருத்துவம் பிரபலமாகியுள்ளது. எந்த நிறம் என்னென்ன பலனை தரும் என்று பார்ப்போமா...மஞ்சள் நிறம்: தன்னம்பிக்கை கொடுக்கும். படிக்கும் பிள்ளைகளின் சித்தனையை துாண்டும். இது, நரம்பை வலிமைப்படுத்தும், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின், நரம்பை வலிமைப்படுத்தும் என்கின்றனர், ஆராய்ச்சியாளர்கள்.மனதை ஒருநிலைப்படுத்தும். எப்போதும், 'அலர்ட்' ஆக இருக்க வைக்கும். பிள்ளைகள் படிக்கும் அறைகளில் இந்த நிற பெயின்ட் அடிக்கலாம். இந்த நிறத்தை அதிகம் பயன்படுத்தும்போது, சில எதிர்மறையான விஷயங்களும் நடக்கும். சிகப்பு நிறம்: பொதுவாக துாண்டுதல் உணர்வு அதிகமாக இருக்கும். ஆக்ரோஷ உணர்வை துாண்டுவதற்காக, அந்த காலத்தில், போரின் போது, கொடிகளில் சிகப்பு நிறத்தை தான் பயன்படுத்துவர்.ரத்த சோகை, குறைந்த ரத்த அழுத்தம், உடல் சோர்வு, சோம்பேறித்தனம், 'மென்டல் டிசார்டர்' மற்றும் பெண்களுக்கான கருப்பை சார்ந்த நோய் இருப்போருக்கு, இந்த சிகப்பு நிறத்தை கொண்டு சிகிச்சை கொடுத்தால், விரைவில் குணமடைவர்.அதேநேரம், அதிகமான உதிரப் போக்கு இருப்பவர்களுக்கு, சிகப்பு நிறம் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும்.உளவியல் ரீதியாக பார்த்தால், சிகப்பு நிறத்தை விரும்புவோர், சுறுசுறுப்பாக இருப்பர். மிகுந்த தைரியசாலி. சுயமாக யோசிச்சு செயல்படுவர். எப்பவும் அவர்களிடம் ஒரு வேகம் இருக்கும்.அதிகப்படியாக சிகப்பு நிறம் பயன்படுத்துவோருக்கு, 'ஈகோ' அதிகம் இருக்கும். தனிமையை விரும்புவர். எதையும் சீக்கிரம் ஏத்துக்க மாட்டாங்க. 'செக்சுவல் அட்ராக் ஷன்' ஜாஸ்தியாக இருக்கும்.பச்சை நிறம்: மனநிலையை சீராக இருக்க வைக்கும். கிராமத்தில் இருப்பவர், நம்மை விட அதிகமான பிரச்னைகளுடன் இருந்தாலும், மன அழுத்தம் குறைவாக இருக்க, அவர்களை சுற்றி இருக்கும் பசுமை தான் காரணம்.இதயம் சார்ந்த நோய்களை பச்சை நிறம் குணப்படுத்தும். ஹார்மோன் சிக்கல்களை சமநிலைப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி, நோயை குணப்படுத்தும் தன்மை இரண்டும் பச்சை நிறத்துக்கு உள்ளது.உடம்பு மற்றும் மனது சீர்குலைந்தாலும், அதை இயல்புக்கு கொண்டு வரும் தன்மை பச்சை நிறத்துக்கு உண்டு. வயலட் நிறம்: இந்த நிறம் பிடிச்சவங்க, ஆன்மிகம் சார்ந்து அதிகம் செயல்படுவர். சுறுசுறுப்பாக இருக்க மாட்டாங்க; ஆனால், 'ஸ்லோ அண்ட் ஸ்டடி'யாக இருப்பர்.படபடப்பை வெகுவாக குறைக்கிற நிறம் இது. இதயத்தின் செயல்பாட்டை குறைக்கும். இல்லாததை இருக்குன்னு சொல்ற, 'ஹிஸ்டீரியா' மாதிரியானவங்களுக்கு, வயலட் நிற தெரபி ரொம்பவே உபயோகமாக இருக்கும். மண்ணீரலின் செயல்பாட்டை துாண்டும். ரத்த வெள்ளையணுக்களின் திறனையும் கூட்டும். ஆரஞ்சு நிறம்: இந்த நிறத்தை பார்க்கும் போதே நம்மை அறியாமல் ஒரு சந்தோஷம் வரும். உடல்ரீதியாக பார்த்தால் இந்த நிறம் தைராய்டு சுரப்பியை சீராக இயங்க வைக்கும். தசைப்பிடிப்பு வலிகளை, நீக்கும். இதனால், பெண்களுக்கு, 'பிரீயட்ஸ்' பிரச்னை தொந்தரவுகள் இருக்காது. பாலுாட்டும் தாய்மார்களுக்கு பால் சுரக்கும் தன்மை கூடும். இந்த நேரத்தில், ஆரஞ்சு நிற உடைகள் அணியலாம்.ஆரஞ்சு நிறத்தை விரும்புறவங்க, மத்தவங்களை சந்தோஷமா வச்சு, தாங்களும் சந்தோஷமா இருக்கணும்ன்னு நினைப்பர். செக்ஸுவல் விஷயத்தை ரொம்பவே கட்டுக்குள் இருக்க வைக்கும் நிறம், ஆரஞ்சு. நீல நிறம்: மன அமைதியை கொடுக்கும் ரொம்ப, 'பாசிட்டிவ்' ஆன நிறம் இது; நோய் எதிர்ப்பு திறனை அளிக்கும். மன அழுத்தத்திற்கு எதிரான, சிறந்த நிறம்.இந்த நிறத்தில், 'மெடிடேஷன்' பண்ணும் போது, ரத்தக் கொதிப்பு குறையும். எல்லாவித உளவியல் சிக்கல்களுக்கும் தீர்வு அளிக்கும். தலைவலி, காய்ச்சலுக்கு, உடனடி நிவாரணம் நீல நிறம் தான்.இன்டிகோ - ராயல் ப்ளூ நிறம்: பொதுவாக தியானம் மாதிரியான ஆன்மிக விஷயங்களுக்கான நிறம் இது. நம் உடம்பின் நச்சுத்தன்மையை வெளியேற்றும் தன்மை, இந்நிறத்திற்கு உண்டு.இந்த நிறம், ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மைக் கொண்டது. காது மற்றும் கண்கள் சார்ந்த நோய்க்கு இது மிகவும் நல்லது.ராயல் மனப்பான்மையுடன் இருக்குறவங்க, இதை விரும்புவர். அந்த காலத்தில் ராஜாக்களின் உடை மற்றும் மாட மாளிகைகளில், நிச்சயம் இந்த இன்டிகோ இருக்கும். இந்த நிறத்தை விரும்புபவர்கள், சிந்தனை எல்லாமே உயர்வானதாக தான் இருக்கும். நீல நிறத்தை போலவே, இதுவும் உடம்பை சமநிலையில் வைத்திருக்கும்.வெண்மை நிறம்: இந்த நிறம் பிடிக்கிறவங்க அமைதியானவர்கள். உண்மை விரும்பிகள். பிரச்னையில் இருப்பவர்களை காப்பாற்ற முன் நிற்பர். தன்னைத்தானே காத்துக் கொள்ளும் தன்மையும் இருக்கும்.- எஸ்.அசுவபதி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !