சமையல் டிப்ஸ்!
* காலிபிளவர் சமைக்கும் போது, சிறிது பால் அல்லது பால் பவுடர் சேர்த்தால், அதன் வெண்மை நிறம் மாறாமல் சுவையாக இருக்கும்* தயிர் பச்சடி, சாலட் போன்றவற்றை செய்யும் போது, இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்தால் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்* பெருங்காயத்தை, முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் அந்த நீரை உபயோகித்தால், மணம் மாறாமல் இருக்கும்; பெருங்காயமும் குறைவாக செலவாகும்.—ஏ.எஸ்.கோவிந்தராஜன்