உள்ளூர் செய்திகள்

ஊழல் மன்னனின் கவிதை தொகுப்பு நூல்!

சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன ஊழல் பற்றி யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.அந்த ஊழலுக்காக, அதன் சேர்மன் பி.ராமலிங்க ராஜு, பல மாதம் சிறையில் இருந்து, சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்துள்ளார்.ராமலிங்க ராஜு எழுதிய கவிதைகளின் தொகுப்பை, அவர் மனைவி நந்தினி, சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார். 'நாலோ நேனு' என்ற தலைப்பு கொண்ட இந்த கவிதை தொகுப்பில், ராமலிங்க ராஜு எழுதிய, 56 கவிதைகள் இடம் பெறுகின்றன. இந்த தொகுப்புக்கு, உணர்ச்சி பூர்வமாக முன்னுரை எழுதியிருப்பவர் நந்தினி.டெயில் பீஸ்: இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகளை, ராஜு, 30 ஆண்டுகளுக்கு முன் எழுதியிருக்கிறார்; சிறைச்சாலையில் எழுதியவை அல்ல.— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !