உள்ளூர் செய்திகள்

கிரிஸ்டல் உலகம்!

'சுவரோஸ்கி கிரிஸ்டல் உலகம்' எனும் அருங்காட்சியம், ஆஸ்திரியா நாட்டில், வாட்டன்ஸ் நகரில் உள்ளது. இந்த கிரிஸ்டல் உலகை உருவாக்கியவர், மல்டி மீடியா நிபுணர், ஆன்டிரி ஹலர். இதன் நுழைவு வாயிலில், ஒருவரின் வாயிலிருந்து தண்ணீர் கொட்டுவது போன்று வித்தியாசமாக வடிவமைத்துள்ளனர்.இந்த கிரிஸ்டல் உலகில் நுழைந்தால், கிரிஸ்டல்கள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முடியும். மேலும், பல கலைஞர்களால் உருவாக்கப்பட்ட கிரிஸ்டல் பொருட்கள் இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. வைரம் போன்று ஒரு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதனுள் சென்றால், நாம், ஒரு வைரக் கல்லுக்குள் நுழைந்த பிரமிப்பு, ஏற்படுகிறது. இதை காண, பல நாடுகளிலிருந்து, மக்கள் வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !