உள்ளூர் செய்திகள்

ஜப்பான் பெண்கள் பயன்படுத்தும் டயாபர்!

வழக்கமாக, குழந்தைகளும், வயதானவர்களும் தான் டயாபர் பயன்படுத்துவர். ஜப்பானில், இளம் பெண்கள் கடுமையான உழைப்பாளிகள். இப்படி, வேலைக்கு செல்லும் பெண்கள், தற்போது சிறுநீர் கழிக்கக் கூட நேரமின்றி, பெரியவர்களுக்கு விற்பனையாகும் டயாபர்களை, வாங்கி பயன்படுத்துகின்றனர். இந்த, புது பேஷன் வெகு வேகமாக பரவி வருகிறது. இதனால், சிறுநீர் கழிக்க அடிக்கடி டாய்லெட்டுக்கு செல்ல வேண்டியதில்லை. அலுவலக நேரத்தில், நிறைய நேரம் இதனால் மிச்சமாவதாக நினைக்கின்றனர் அப்பெண்கள். ஜட்டி துவைக்கிற வேலை மிச்சம்ன்னு நினைச்சிருப்பாங்களோ? இன்று, ஜப்பானில் அனைத்து கடைகளிலும், பெரியவர்களுக்கான டயாபர் விற்பனை வெகு ஜோராக நடக்கிறது.— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !