எலி ஜோசியம் பார்க்கலையோ!
கிளி ஜோசியம் போல, எலி ஜோசியமும் இருப்பது போல தமாஷ்கள் வருவதுண்டு. ஆனால், நிஜமாகவே எலி ஜோசியம் இருக்கிறது. கேரள மாநிலம், கோழிக்கோடு கடற்கரையில் கண்ட காட்சி தான் படத்தில் நாம் காண்பது. எலி, சீட்டு எடுப்பதை பாருங்கள். வெள்ளை மற்றும் பிரவுன் கலந்த நிறத்தில், எலி போல காணப்பட்டாலும், இது எலி அல்ல. தென் அமெரிக்காவில் காணப்படும் அரிய வகை உயிரினம் இது. - ஜோல்னாபையன்