உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல் ஜிலேபி!

திருநெல்வேலி என்றால் அல்வா, தூத்துக்குடி என்றால் மக்ரோன்ஸ் என்று ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஸ்பெஷல் இனிப்போ, காரமோ அல்லது ஏதோ ஒரு சிறந்த உணவு வகை இருக்கும். அவ்வகையில், வெவ்வேறு ஊர்களின் சிறப்பு உணவு வகைகள் இப்பகுதியில் இடம் பெறும். பிரியாணி மற்றும் பூட்டுக்கு மட்டுமல்ல, ஜிலேபிக்கும் பெயர் பெற்ற ஊர், திண்டுக்கல்.இவ்வூர் ஜிலேபியை சுவைத் தவர்களின் நாக்கை, திண்டுக்கல் பூட்டாலும் பூட்ட முடியாது. திருமணமான பெண்ணுக்கு கொடுக்கும் மறுவீட்டு பலகாரங்களில் ஜிலேபியும் சேர்த்து கொடுக்கும் அளவிற்கு, இங்கே, பிரபலம்.காலை, 10:00 மணியிலிருந்து, இரவு, 10:00 மணி வரை, எப்போது சென்றாலும் சுடச் சுட கிடைக்கும் என்பதற்காகவே, திண்டுக்கல் நாகல் நகரில் உள்ள ஜிலேபி கடையை மொய்க்கின்றனர், மக்கள். இக்கடை உரிமையாளர்களில் ஒருவரான விஜயகுமார், 'முக்கால் பங்கு உளுந்துக்கு, கால் பங்கு பச்சரிசி என்ற அளவில் கலந்து ஆட்டி, கொதிக்கும் எண்ணெயில் பொரித்து எடுத்து, ஏற்கனவே தயாரித்து வைத்திருக்கும் சர்க்கரை பாகில் மூழ்க வைத்து எடுத்தால், ஜிலேபி தயார்...' என்கிறார்.கடந்த, 1936ல் துவங்கப் பட்ட இக்கடை, 80 ஆண்டுகளை கடந்து, விற்பனையில் கொடி கட்டி பறக்கிறது.விஜய குமாரின் மொபைல் எண்: 94434 01564 - மு.ஆதவன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !