4 நாட்களுக்கு தீபாவளி
வட மாநிலங்களில், தீபாவளி திருநாள், நான்கு நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. அப்போது, பல்வேறு வகையான கொண்டாட்டத்தில் மக்கள் ஈடுபடுகின்றனர், பூஜைகள் செய்கின்றனர்முதல் நாளை, நரக சதுர்த்தியாக, தீய சக்திகள், அதாவது, நரகாசுரன் அழிந்த நாள், வாழ்வில் வளம் பிறக்கும் நாளாக கொண்டாடப்படுகிறது. இரண்டாவது நாள், அமாவாசையன்று, லட்சுமி தேவியை வணங்குகின்றனர். மூன்றாவது நாளில், கார்த்திகை சுத்த பதயாமி தினமாக கொண்டாடப்படுகிறது. நான்காவது நாள், யம துவிதியை தினமாக கொண்டாடுகின்றனர். அதாவது, அன்று பெண்கள், தங்களது சகோதரர்களுக்கு புத்தாடை கொடுத்து, வணங்கி ஆசிர்வாதம் பெறும் தினம்.