உள்ளூர் செய்திகள்

தீபாவளி ஸ்பெஷல்!

பாதாம் மிட்டாய்!

தேவையானவை: பாதாம் பருப்பு - 2 கப் (மிக்சியில் ஒரே சீராக பொடிக்கவும்) சர்க்கரை - 2 கப், ஏலக்காய் துாள் - அரை தேக்கரண்டி.செய்முறை: கடாயில் சர்க்கரையை போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு மிதமான தீயில் வைக்கவும். சர்க்கரை இளம் பாகாக மாறும்போது, பொடித்து வைத்துள்ள பாதாம் துண்டுகள், ஏலக்காய் துாள் சேர்த்து கெட்டியாக கிளறி, தட்டில் கொட்டவும். லேசான சூடு இருக்கும் போதே, தட்டிலிருந்து துண்டுகளாக வெட்டி எடுத்து வைக்கவும்.குறிப்பு: சர்க்கரை பாகு இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கும்போதே பாதாமை சேர்க்க வேண்டும். சர்க்கரை கரைந்ததும் அதிக நேரம் கொதிக்க விட வேண்டாம்.

பட்டர் முறுக்கு!

தேவையானவை: பச்சரிசி மாவு - 200 கிராம், கடலை மாவு - 300 கிராம், வெண்ணெய் - 100 கிராம், கறுப்பு எள் - 10 கிராம், உப்பு, எண்ணெய் பொரிக்க தேவையான அளவு.செய்முறை: அகலமான பாத்திரத்தில் பச்சரிசி மாவு, கடலை மாவு, வெண்ணெய், கறுப்பு எள், உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பிறகு, அதை சற்று பெரிய துளையுள்ள நட்சத்திர அச்சில் போட்டு, நன்றாக காய்ந்த எண்ணெயில் பிழிந்து வேக வைத்து எடுக்கவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !