உள்ளூர் செய்திகள்

குழிமண்டெலி தெரியுமா?

படத்தில் காணப்படும் பாம்பு, செடிகளில் மறைந்திருக்கும் போது, பச்சை நிறத்துடன் இருப்பதால், எளிதில் கண்டுபிடிக்க முடியாது. இப்பாம்பை, கேரளாவில், குழிமண்டெலி என, அழைக்கின்றனர். ஏதாவது உயிரினம், சற்று தொலைவில் வரும்போதே, அதன் உடலில் உள்ள வெப்பம் இதற்கு தெரிந்து விடும்.இதன் கண்ணுக்கும், மூக்குக்கும் இடையே ஒரு தாழ்வான பகுதி இருக்கிறது. இதன் வாயிலாக, இது மற்ற உயிரினங்களின் சூட்டை தொலைவில் இருந்தே உணர்ந்து கொள்வதாக கூறுகின்றனர், பாம்பு ஆராய்ச்சியாளர்கள்.— ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !