உள்ளூர் செய்திகள்

பொம்மை கிராமம்!

கிழக்காசிய நாடான ஜப்பானில், நகோரோ என்ற கிராமம் உள்ளது. ஒரு காலத்தில், 300 பேர் வசித்தனர். இன்று, 35 பேர் மட்டுமே வசிக்கின்றனர்.தந்தையை கவனித்து கொள்வதற்காக, சுகிமி அயனோ என்ற பெண், கிராமத்துக்கு வந்தாள். பொம்மை செய்வதில் திறமை கொண்ட சுகிமிக்கு, கிராமம் வெறுமையில் இருப்பது வருத்தத்தை தந்தது.இதையடுத்து, ஏராளமான ஆள் உயர பொம்மைகளை செய்து, பொது இடங்கள், பள்ளி, பஸ் ஸ்டாப் என, பல இடங்களிலும் வைத்தார்.இங்கிருந்த ஒரே பள்ளி, 2012ல் மூடப்பட்டு விட்டது. உடனே, அந்த பள்ளியில் மாணவர்கள் இருப்பது போல், பொம்மைகளை செய்து வைத்து விட்டார். இப்படி, 400க்கு மேற்பட்ட பொம்மைகளை செய்து வைத்துள்ளார். இதில், 300 பொம்மைகள் கிராமத்தில் உள்ளது.இப்போது இந்த இடம், சுற்றுலா தலமாக மாறி விட்டது. ஏராளமானோர் வந்து ரசித்து செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !