உள்ளூர் செய்திகள்

சுக்கு!

பல்வேறு மருத்துவக் குணம் கொண்டது சுக்கு; அஜீரணத்தால், தலைவலி ஏற்பட்டால், சுக்கு - 10 கிராம், மிளகு - 5 கிராம் மற்றும் வெள்ளை பூண்டு - 5 கிராம் எடுத்து, பசும்பால் விட்டு, மை போல் அரைத்து, நெற்றியின் இரு பக்கங்களிலும் போட்டுக் கொள்ள, தலைவலி உடனே நீங்கும்.ஒரு துண்டு சுக்கு, ஒரு குண்டு மணி அளவு அதிமதுரம் இரண்டையும் சேர்த்து வாயில் அடக்கி, ஊறலை மட்டும் விழுங்கினால், குரல் கம்மல் நீங்கும்.சுக்கு துண்டை, தோல் நீக்காமல் வாயில் போட்டு மென்று வர, பல் வலி குறையும்.தலைவலி மற்றும் தலைச்சுற்றலை போக்க, சுக்கு கஷாயம் அருந்தலாம்.சுக்கு, மிளகு, திப்பிலி மற்றும் அதிமதுரம் சம அளவு எடுத்து, தூள் செய்து, கஷாயமாக்கி குடித்தால், சளியோடு கூடிய காய்ச்சல், வாய்ப்புண், மண்ணீரல் வீக்கம் மற்றும் அஜீரணம் போன்றவை குணமாகும்.தயிரில், சுக்குதூள் சேர்த்து வெல்லம் கலந்து சாப்பிட, பித்தம் தீரும்.சுக்கை தாய்ப்பால் அல்லது பசும் பாலில் உரசி, நெற்றியில் போட தலைவலி நீங்கும்.தாய்ப்பாலில், சுக்கை உரசி, வயிற்றில் பூச, குழந்தைகளுக்கு வயிற்று உப்புசம் நீங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !