உள்ளூர் செய்திகள்

காவியக் காதல்!

எத்தனை வயதானால் என்ன... காதல் நினைவுகள் மறக்காது என்று கூறி, 65 ஆண்டுகளுக்கு முன், காதலன் அன்பாக அளித்த சிகப்பு ஜாக்கெட்டை இன்னும் பாதுகாத்து வருகிறார், 85 வயதான, மாதவியம்மா என்ற மூதாட்டி. அது, டிசம்பர், 20, 1946... கேரளாவில் உள்ள கண்ணூர் அருகில், கரிவெள்ளூர் என்ற ஊரில், கம்யூ., கட்சியின் சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக, இவரது காதலனான குஞ்சிராமனை, துப்பாக்கியால் சுட்டனர், போலீசார். அதில் சில குண்டுகளை உடலிலிருந்து அப்புறப்படுத்தாத காரணத்தால், ஆறு ஆண்டுகள் உயிர் வாழ்ந்த பின், மரணமடைந்தார். இன்றும், அவர், தனக்களித்த அன்பு பரிசான சிகப்பு நிற ஜாக்கெட்டை பாதுகாத்து வருகிறார், மாதவியம்மா.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !