பெண் பைலட்!
விமானப்படையில், 15 ஆண்டுகள், விமானங்களை ஓட்டிய பின்னரே, ஏர் - இந்தியா விமானத்தில் பைலட் ஆகி இருக்கிறார், பிந்து செபாஸ்டின். 25 ஆண்டுகளாக, இவர், 10 ஆயிரம் மணி நேரம் விமானம் செலுத்தி, அசத்தியுள்ளார். பயணியரில் சிலர், விமானத்தில் ஏறும்போது, 'பைலட், ஒரு பெண் என்றதும், கதிகலங்குவதை கண்டிருக்கிறேன்...' என்கிறார் பிந்து. இவர்களில் சிலர், உடனே வீட்டுக்கு போன் செய்து, 'பைலட் ஒரு பெண்...' என்றனர்.'இது எனக்கு மிகவும் பிடித்த தொழில், 65 வயது வரை விமானம் ஓட்ட வேண்டும் என்பது தான் என் ஆசை...' என்கிறார் கேரளா மாநிலம், பத்தணம் திட்டாவை சேர்ந்த இந்த பெண் பைலட். — ஜோல்னாபையன்.