நான்கு கோடி சம்பளம் கேட்கும் சசிகுமார்!
ஈசன் மற்றும் போராளி படங்களின் தோல்வியால், சம்பள விஷயத்தில் ரொம்ப அடக்கமாக இருந்த சசிகுமார், சுந்தரபாண்டியன் பட வெற்றிக்கு பின், தடாலடியாக நான்கு கோடி ரூபாய் சம்பளம் என்று அறிவித்துள்ளார். தற்போது நடித்து வரும், குட்டிப்புலி படமும் ஹிட்டானால், இன்னும் எத்தனை கோடி எகிறும் என்றே சொல்ல முடியாது! இதைக் கேள்விப் பட்டு, சசிகுமாரை, 'புக்' செய்ய காத்திருந்த சில பட்ஜெட் படாதிபதிகள், அவரை விட்டு விலகி, விமல், விஜயசேதுபதி ஆகியோரை அணுக ஆரம்பித்து விட்டனர்.—
சினிமா பொன்னையாஇமேஜை மாற்றும் நயன்தாரா!
முத்தக்காட்சி நடிகை, பிகினி நடிகை என்று, தன் மீது விழுந்துள்ள, இமேஜை மாற்றும் முயற்சியில் தீவிரமடைந்துள்ளார் நயன்தாரா. அதனால், நடித்து வரும், வலை, ராஜாராணி மற்றும் இது கதிர்வேலன் காதல் ஆகிய படங்களில், துளியும் கவர்ச்சி காட்டாத குடும்பப் பாங்கான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதோடு, தன்னை யாரும் இனி கவர்ச்சி கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது என்பதற்காக, தன் நடிப்பில் காமெடியை கூடுதலாக வெளிப்படுத்தி வருகிறார். தனக்கு உகந்த ஊணும், பிறருக்கு உகந்த கோலமும்!—
எலீசாபேய் படத்தில் பவர் ஸ்டார்!கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்கு பின் பிசியான பவர் ஸ்டார் சீனிவாசன், காமெடி, குத்துப்பாட்டு என்று, டஜன் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது, காந்தாரி என்றொரு பேய் படத்திலும், கமிட்டாகியுள்ளார். இதில், ஒரு பேய் வீட்டில் சிக்கிக் கொள்ளும் பவர்ஸ்டார், அங்கிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதையும், காமெடியாக படமாக்குகின்றனர்.— சி. பொ.,ஆச்சரியப்பட வைத்த அமலாபால்!
தலைவா படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து விட்ட போதிலும், தான் உச்ச நடிகை என்ற பந்தாக்களை அவிழ்த்து விடவில்லை அமலாபால். சமுத்திரகனி இயக்கும், நிமிர்ந்து நில் படத்தின் தெலுங்கு பதிப்பில், இடுப்பு வரை சாக்கடைக்குள் நின்றபடி, ஒரு காட்சியில் நடித்துள்ளார் அவர். இன்றைய ‹ழலில், நடிப்புக்காக எந்தவொரு நடிகையும் அமலாபால் அளவுக்கு இறங்கி வர மாட்டார்கள் என்று, அவரைப் பற்றி கோலிவுட்டில் பெருமையாக சொல்லி வருகிறார் இயக்குனர் சமுத்திரகனி. ஆள் அறிந்து ஆசனம் போடு; பல் அறிந்து பாக்கு போடு!— எலீசாஆக்ஷனுக்கு மாறும் ரீமா கல்லீங்கல்!
பரத்துடன், யுவன் யுவதி படத்தில் நடித்த ரீமா கல்லீங்கல், பின் தமிழுக்கு வராத போதும், மலையாளத்தில் நம்பர் - ஒன் நடிகையாகி விட்டார். இவருக்கு, அடுத்து ஆக்ஷன் ஹீரோயினி ஆக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. மலையாளத்தில், அது மாதிரி கதைகள் கிடைப்பது அரிது என்பதால், தமிழ், தெலுங்கு இயக்குனர்களிடம், தன் ஆக்ஷன் ஆசையை சொல்லி, சான்ஸ் கேட்டு வருகிறார் ரீமா கல்லீங்கல்.— எலீசாஅனுஷ்காவுக்கு அவார்டு!தெலுங்கில் இரண்டு சரித்திர படங்களில் நடித்து வரும் அனுஷ்கா, தமிழில், இரண்டாம் உலகம் படத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறார். இப்படத்தில், பழங்குடியின பெண்ணாக நடித்துள்ள அனுஷ்கா, உடம்பில் இலை, தழைகளை கட்டியபடி நடித்துள்ளார். மேலும், பழங்குடி பெண்களின் மேனரிசத்தை, அப்படியே உள்வாங்கி பிரதிபலித்துள்ளதாகவும் கூறுகிறார். அதைப்பார்த்து, இப்படத்தில் உனக்கு விருது கிடைக்க வாய்ப்புள்ளது என்று, சிலர் கருத்து கூறினர். அதனால் தான், இப்படம் எப்போது வெளியாகும் என்ற ஆவலுடன் இருப்பதாக கூறுகிறார். ஆகும் காலம் வந்தால் தேங்காய்க்கு இளநீர் போல் சேரும்!— எலீசாபாண்டிராஜ் கதைத் தேடலில்!சிலரை போல் ஸ்டார் ஓட்டலில் அமர்ந்து கற்பனையாக கதை எழுதுவது, டைரக்டர் பாண்டிராஜுக்கு பிடிக்காது. இப்போதும் டூ-வீலரிலேயே பயணிக்கும் அவர், தான் பொது இடங்களில் பார்க்கும் மனிதர்கள், அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் அனைத்தையும் தன் படங்களில் பிரதிபலிக்கிறார். இதுவரை தான் இயக்கிய, பசங்க, வம்சம், மெரினா, போன்ற கதைகள் எல்லாமே, மக்களிடமிருந்து எடுத்த கதைகள் தான் என்கிறார். — சி.பொ.,சமந்தா படத்துக்கு தடை!
தெலுங்கில் சித்தார்த் - சமந்தா இணைந்து நடித்த படம், ஜாபர்தஸ்த். இப்படத்தை, டும் டும் பீபீ என்ற பெயரில் தமிழில், 'டப்' செய்து வருகின்றனர். ஆனால், பேண்ட் பாஜாபரத் என்ற இந்தி படத்தை தயாரித்து வெளியிட்ட நிறுவனம், 'எங்கள் படத்தின் கதையைத் தான், ஜாபர்தஸ்த் என்ற பெயரில் ரீ-மேக் செய்துள்ளனர்...' என்று, நீதிமன்றத்தில் தடை வாங்கி விட்டனர். இதனால், தமிழில் அப்படம் வெளிவர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.— சினிமா பொன்னையாஅவ்ளோதான்!