உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

உலக இசைக்கலைஞர்கள் போட்டியில், ஏ.ஆர்.ரஹ்மான்! 'எம்.,டிவி' நிறுவனம், உலகளாவிய சிறந்த இசைக்கலைஞர்களை தேர்வு செய்து, 'எம்., டிவி ஐரோப்பிய இசை விருதுகள்' என்ற விருதை, ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. அதற்காக, இந்த ஆண்டின் சிறந்த இசைக்கலைஞர்களை, தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டிக்காக, இந்தியா சார்பில், ஏ.ஆர்.ரஹ்மான், பஞ்சாபை சேர்ந்த ராக் இசைக் கலைஞரான யோயோ ஹனிசிங்கும், தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து, ஏ.ஆர்.ரஹ்மான் கூறுகையில், 'உலக அளவில் அங்கீகாரம் கிடைக்கும் இந்த விருதுக்கான பரிசீலனையில், என் பெயரும் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. திறமை உள்ளவர்கள் வெற்றி பெறுவர்...' என்று தெரிவித்துள்ளார். நவம்பர் 10ம் தேதி, நெதர்லாந்து நாட்டிலுள்ள ஆம்ஸ்டர்டாம் நகரில், இந்த இசைக்கலைஞர்கள் தேர்வின், இறுதி நிகழ்ச்சி, நடைபெற உள்ளது.-- சி.பொ., சமந்தா அனுப்பும் அவசர செய்தி! சித்தார்த்தை ரகசிய திருமணம் செய்து, தனிக்குடித்தனம் நடத்தி வருவதாக, சமந்தாவை பற்றி, டோலிவுட்டில் மீண்டும், 'கிசுகிசு' பரவியுள்ளது. காதல் செய்தி பரவிய போது கூட, பெரிதாக அலட்டிக் கொள்ளாத சமந்தா, திருமண செய்தி, தன் மார்க்கெட்டுக்கு உலை வைத்து விடுமோ என்று அதிர்ச்சியடைந்துள்ளார். அதனால், இதுவரை மீடியாக்களை கண்டாலே, ஓடி ஒளிந்து வந்த அவர், இப்போது, அவரே சில மீடியாக்களை தொடர்பு கொண்டு, அவசர அவசரமாக, மறுப்பு செய்தி வெளியிட்டு வருகிறார். அடி அதிசயமே, சீமைச் சரக்கே!- எலீசா ஊழலுக்கு எதிராக பிரியங்கா சோப்ரா! இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவின் தந்தை, இந்திய ராணுவத்தில் அதிகாரியாக இருந்தவர். அவர் பொறுப்பில் இருந்த போது, பல ஊழல் அதிகாரிகளுக்கு, 'லாடம்' கட்டியுள்ளார். இப்போது, அவரைப் போலவே, பிரியங்கா சோப்ராவும் ஊழல் பேர்வழிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். குறிப்பாக, ஊழல் செய்த மத்திய அமைச்சர்களுக்கு எதிராக, கருத்து சொல்லியிருக்கும் பிரியங்கா, 'ஒருவேளை, நான் எதிர்காலத்தில் அரசியலுக்கு வந்து பிரதமரானால், ஊழலை ஒழிப்பது தான் என் முதல் வேலையாக இருக்கும்...' என்று கூறியுள்ளார். எல்லாம் ஏறி இளைத்த குதிரை மீது, அம்மனார் பொற்பட்டம் கட்டப் புறப்பட்டார்!- எலீசா கவர்ச்சி தமன்னா! வீரம் படத்தில் அஜித்துடன் நடித்து வரும் தமன்னா, அப்படத்தில், கிராமத்து கெட்டப்பில் நடித்த போதும், கிளாமருக்கு பஞ்சம் வைக்கவில்லை. பையா படத்தில், டூ-பீசில் மழையில் நனைந்தபடி, கவர்ச்சி நடனமாடியவர், இப்படத்தில், பாவாடை, தாவணி கெட்டப்பில் வளைந்து, நெளிந்து, கவர்ச்சி தரிசனம் கொடுத்துள்ளார். 'என் ரசிகர்கள் கிளாமரை எதிர்பார்க்கின்றனர். அவர்களை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்காகவே கிளாமர் ட்ராக்கில் இருந்து விடுபட முடியவில்லை...' என்கிறார். ஆடிய காலும், பாடிய நாவும் சும்மா இரா!- எலீசா சந்தானத்துக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில், அரசு வெளியீடான குட்கா விளம்பரத்தை, கிண்டல் செய்து, காமெடி செய்த சந்தானத்துக்கு, சமூக ஆர்வலர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, அந்த காட்சிக்கே கத்திரி வைத்தனர். இதனால், அதிர்ச்சியடைந்துள்ள சந்தானம், இனிமேல் பிரச்னைக்குரிய விஷயங்களில் வாய் வைக்க கூடாது என்று, முடிவு செய்துள்ளார். இந்நிலையில், கவுண்டமணி, வடிவேலு போன்ற மெகா காமெடியன்கள், மீண்டும் சினிமாவில் என்ட்ரி ஆகியுள்ளதால், மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ளும் கவலை சந்தானத்துக்கு அதிகமாகியுள்ளது.- சி.பொ., * ஷங்கர் இயக்கத்தில் சிவாஜி மற்றும் எந்திரன் படங்களை பார்த்து, 'என்னவொரு மேனரிசம், என்னவொரு ஸ்டைலு, என்னவொரு ஸ்பீடு...' என்று ரஜினியை பற்றியே பேசி, 'இவருடன் ஒரு படத்திலேனும் நடிக்காமல், நான் லண்டனுக்கு திரும்ப மாட்டேன்...' என்று சொடக்கு போட்டு கூறுகிறார், எமி ஜாக்சன்.அவ்ளோதான்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !