இதப்படிங்க முதல்ல...
நடிகர் சங்கத்தின் குருதட்சணை திட்டம்!தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களை முறைப்படுத்தி, அவர்களின் தேவைகளை நிறைவேற்றும் முயற்சியாக, 'குருதட்சணை திட்டத்தை' துவங்கியுள்ளது நடிகர் சங்கம். இதையடுத்து, சென்னையிலுள்ள, ௧,௦௦௦ உறுப்பினர்களின் விவரங்களை, புகைப் படத்துடன் இணையதளத்தில் வெளியிடும் வேலைகள் நடக்கிறது. அத்துடன், வெளியூர்களில் உள்ள நாடக நடிகர்களின் விவரங்களை சேகரிக்கும் வேலைகளும், துரிதமாக நடந்து வருகிறது.— சினிமா பொன்னையாதனுஷ் புராணம் பாடும் நிகிதா படேல்!கோலிவுட்டில் நடிக்கும் பெரும்பாலான நடிகைகள், விஜய் மற்றும் அஜித்துடன் டூயட் பாட வேண்டும் என்பது தான் தங்களது கனவு என்பர். ஆனால், என்னமோ ஏதோ மற்றும் தலைவன் போன்ற படங்களில் நடித்த கன்னட நடிகை நிகிதா படேலுக்கு, தனுஷுடன் நடிக்க வேண்டும் என்பது தான் ஆசை. இதுகுறித்து, அவர், 'தனுஷ் நடித்த படங்களை பார்க்க உட்கார்ந்தால், என்னால் நகரவே முடியாது. அந்த அளவுக்கு, அவர், தத்ரூபமான நடிகர். அதோடு, நம் பக்கத்து வீட்டு பையன் போலவே இருப்பதால், அவரை, வேற்று நபராகவும் நினைக்க முடியாது...' என்று தனுஷ் புராணம் பாடுகிறார். கொத்து வாழ்வுக்கு பலகை பிடிக்கிறது!— எலீசாகார்த்திக்கிற்காக பாடும் கமல்!தன் மகன் கவுதம் நடிக்கும், முத்துராமலிங்கம் படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்கிறார், நடிகர் கார்த்திக். இப்படத்தில் இளையராஜாவின் இசையில் ஒரு பாடலை பாடியுள்ளார் கமல். இதுகுறித்து, 'இப்படத்திற்கு இளையராஜா இசையமைப்பதே பெருமை; இதில், அவர் பாடலை கமல் பாடுவதும், அப்பாடலில் நான் நடிப்பதும், எனக்கு கிடைத்த இன்னொரு பெருமை...' என்று பூரிக்கிறார், கார்த்திக்.— சி.பொ.,சன்னி லியோன் பெருமை!ஆபாச வீடியோக்களில் நடித்த பாலிவுட் நடிகை சன்னி லியோனுடன் நடிப்பதற்கு, இப்போதும், பிரபல கதாநாயகர்கள் தயங்குகின்றனர். ஆனால், அவரோ, 'ஆபாச படங்களில் நடித்தது குறித்து, பெருமைப்படுகிறேன்...' என்று தெரிவித்துள்ளவர், 'அதுதான் என்னை இப்படியொரு நல்ல இடத்துக்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. அதனால், அம்மாதிரி படங்களில் நடித்தது குறித்து, யாராவது என்னை கிண்டல் செய்தால், அது என்னை வருத்தமடையச் செய்கிறது...' என்கிறார். இது என் குலாசாரம்; இது, என் வயிற்று ஆகாரம்!— எலீசாபிரபுசாலமன் இயக்கும் கும்கி - 2!சிங்கம், மற்றும் காஞ்சனா என, 'ஹிட்'டான சில படங்களின் இரண்டாம் பாகம் வெளியானது போல், தற்போது, பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான, கும்கி படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகிறது. முந்தைய படத்தில் நடித்த, விக்ரம் பிரபு, லட்சுமிமேனன் ஜோடி இல்லாமல், வேறு ஜோடியை அப்படத்தில் நடிக்க வைக்கிறார் பிரபுசாலமன். தற்போது, தனுஷின், ரயில் படத்தின் இறுதிகட்ட வேலைகளில் ஈடுபட்டுள்ளவர், அப்படம் வெளியானதும், கும்கி - 2 வேலைகளை துவங்குகிறார்.— சினிமா பொன்னையாகறுப்பு பூனை!அகர்வால் நடிகையின் அலம்பல் இன்னும் தீர்ந்தபாடில்லை. கதாநாயகன் மற்றும் இயக்குனர் என அனைவரும், 'ஸ்பாட்'டுக்கு வந்த பின் தான் இவர் ஓட்டல் அறையை விட்டே வெளியேறுகிறார். அதனால், ஒட்டுமொத்த யூனிட்டும் அவரது வருகைக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால், மேற்படி நடிகையை, 'கோலிவுட்டை விட்டே விரட்டியடிக்க வேண்டும்...' என்று சில தயாரிப்பாளர் வரிந்து கட்டியுள்ளனர்.ரம்மி நடிகைக்கு, சில நடிகைகளைப்போன்று, தான் கலராக இல்லையே என்கிற வருத்தம் அதிகமாகி விட்டது. அதனால், இதற்கு முன், வாரந்தோறும் தலை மசாஜ் மட்டுமே செய்து வந்த நடிகை, சமீபகாலமாக தன் பாடியை, 'பாலிஷ்' செய்கிறார். சம்பந்தப்பட்டவர்கள், 'இன்னும், மூன்றே மாதத்தில், தமன்னாவுக்கு தங்கச்சி மாதிரி ஆகிடுவீங்க...' என்று நடிகைக்கு வாக்குறுதி வழங்கியுள்ளனர்.லண்டன் நடிகையின் விருந்து கலாசாரம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் முக்கியஸ்தர்களை மட்டுமே அழைத்து உபசரித்த நடிகை, இப்போது புதுவரவு, டெக்னீஷியன்களுக்கும் விருந்து கொடுக்கிறார். இதனால், நடிகையை வைத்து படம் செய்ய, ஆளாளுக்கு போட்டி போட துவங்கி விட்டனர்.சினி துளிகள்!* தெறி படத்தில் விஜய்யின் காதலியாக நடித்துள்ளார் எமிஜாக்சன்.* ஐஸ்வர்யா ராஜேஷின் கைவசம், தற்போது, ஒன்பது படங்கள் உள்ளன.* மேல்தட்டு கதாநாயகர்களின் படங்கள் குறைந்து விட்டதால், இரண்டாம் தட்டு கதாநாயகர்களின் படங்களுக்கு, கல்லெறிந்து வருகிறார் காஜல் அகர்வால்.அவளோதான்!