இதப்படிங்க முதல்ல....
'அப்பு' கெட்டப்பில், ஷாரூக் கான்!அபூர்வ சகோதரர்கள் படத்தில், கமல் நடித்த, அப்பு கெட்டப்பைப் போன்று, ஒரு படத்திலேனும் நடித்து விட வேண்டுமென்பது, பாலிவுட் நடிகர் ஷாரூக் கானின் நீண்ட கால ஆசை. இந்நிலையில், பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல்.ராய், அதே பாணியில் ஒரு கதை கூற, தற்போது, அப்படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் ஷாரூக் கான். இப்படத்தில், அப்பு கெட்டப்பிலேயே, படம் முழுக்க நடிக்கிறார்.— சினிமா பொன்னையா'வீடியோ கேம்' கதாபாத்திரத்தில் எமி!ரஜினி நடித்து வரும், 2.0 படத்தில், ரஜினிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் எமிஜாக்சன். கதைப்படி, இவரது வேடம், 'டாம்ப் டைரர்' என்ற வீடியோ கேமில் வரும், லாரா கிரப்ட் கதாபாத்திரத்தைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன், எமிக்கு ஒரு சண்டை காட்சியும் உள்ளது. அதனால், அக்காட்சியில் கயிற்றில் தொங்கியபடி, பறந்து பறந்து சண்டை போடவும், அவருக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. கால்வாயைத் தாண்டாதவன், கடலைத் தாண்டுவானா?— எலீசாஷகிலாவாக நடிக்கும் சன்னி லியோன்!இந்திய அளவில், தன் கவர்ச்சியால், இளவட்ட ரசிகர்களை கிறங்கடித்து வருபவர் சன்னி லியோன். அதேபோல், சில ஆண்டுகளுக்கு முன்வரை, மலையாள கவர்ச்சி படங்களில் நடித்து வந்தவர் ஷகிலா. ஆனால், இப்போது அவர் கதாபாத்திர நடிகையாகி விட்டார். இந்நிலையில், ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி, தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ஒரு படம் தயாராக உள்ளது. இப்படத்தில் நடிக்க, சன்னி லியோனை கேட்டதும், உடனே சம்மதம் சொல்லி விட்டார். மேலும், சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவான, த தர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடித்த வித்யாபாலனுக்கு தேசிய விருது கிடைத்ததால், சன்னி லியோனுக்கும் அப்படியொரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.— எலீசாமூன்று மொழிப்படத்தில் ஜாக்கிசான்!இந்தியா - சீனா கூட்டு தயாரிப்பில் உருவாகி வரும் படம்: குங்பூ யோகா. ஜாக்கிசான் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், சோனுசூட் மற்றும் ஆரிப் ரகுமான் போன்ற இந்திய நடிகர்களும், ஜாங் யிஜிங் மற்றும் மிங் ஹூ போன்ற பிரபல சீன நடிகர்களும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு, ஜெய்ப்பூரில் துவங்கி, சீனாவில் முடிவடைகிறது. தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இப்படம் தயாராகிறது. — சினிமா பொன்னையாகறுப்பு பூனை!வாசனை காமெடியனை, தன்னுடன் மீண்டும் காமெடி செய்யுமாறு, பிரியாணி நடிகர் அழைத்த போது, மறுத்து விட்டார். அத்துடன், 'நீங்க மட்டும் படத்துக்குப் படம் இளவட்ட நடிகைகளோடு ஜாலி பண்ணுவீங்க; காமெடியனுங்க நாங்க அதப் பாத்து நொந்து போகணுமா... எம் பக்கமும் இப்ப காத்தடிக்குது. அதனால, நானும் கொஞ்சம் ஜாலி பண்ணிக்கிறேன் மாமு...' என்று பிரியாணியின் அழைப்பை, நிராகரித்து விட்டார் காமெடியன்.வருத்தப்படாத வாலிபர் சங்க நடிகையின் மார்க்கெட், ஆட்டம் கண்டு கிடக்கிறது. இதற்கு காரணம், கேரளாவில் இருந்து தமிழுக்கு இறக்குமதியான புதுவரவு நடிகைகள் தான் என்பதால், அவர்களை நோக்கி சாபம் விடுகிறார். அத்துடன், இதுவரை எக்குத்தப்பாக சம்பளம் கேட்டு வந்த நடிகை, தற்போது, சூழ்நிலையை கருதி, தள்ளுபடி அறிவித்து, புதிய பட வாய்ப்புகளுக்காக, நள்ளிரவு பார்ட்டிகளிலும் ஆஜராகி வருகிறார். சினி துளிகள்!* தில்லுக்குத் துட்டு என்ற படத்தில், இப்போதைய முன்னணி கதாநாயகர்கள் ரேஞ்சுக்கு, ஆக் ஷன் ஹீரோயிசத்தில் அசத்தியுள்ளார் சந்தானம். * மருது படத்தில் விஷாலுக்கு ஜோடியாக, கிராமத்து பெண் வேடத்தில் நடித்துள்ளார் ஸ்ரீதிவ்யா.* தெறி படத்தை அடுத்து, பரதன் இயக்கத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார், விஜய்.அவ்ளோதான்!