இதப்படிங்க முதல்ல...
'கேங்ஸ்டராக' நடிக்கும் அஜித்!மங்காத்தா படம் துவங்கி, வேதாளம் படம் வரை, 'சால்ட் அண்ட் பெப்பர்' கெட்டப்பில் நடித்த அஜித், அடுத்து, தன், 57வது படத்திற்காக, உடம்பை, 'ஸ்லிம்' செய்து, அதே ஹேர் ஸ்டைலில் நடிக்கிறார். அத்துடன், இப்படம், 'கேங்ஸ்டர்' கதையில் உருவாக இருப்பதால், இதுவரை வெளியான அஜித் படங்களிலிருந்து மாறுபட்டு, முழுக்க முழுக்க அயல்நாடுகளில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ள இயக்குனர் சிவா, ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் மற்றும் ஸ்டன்ட் நடிகர்களையும், இப்படத்திற்காக இறக்குமதி செய்கிறார்.— சினிமா பொன்னையாமீண்டும் ரஜினியுடன் நயன்தாரா!த்ரிஷா உள்ளிட்ட சில நடிகைகளுக்கு, ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பது கனவாகவே இருந்து வரும் நிலையில், சந்திரமுகி, சிவாஜி மற்றும் குசேலன் என, மூன்று படங்களில் ரஜினியுடன் நடித்தவர் நயன்தாரா. இந்நிலையில், மலையாளத்தில் மம்மூட்டியுடன் அவர் இணைந்து நடித்த, பாஸ்கர் தி ராஸ்கல் என்ற படத்தை தமிழில் ரஜினியை வைத்து ரீ - மேக் செய்ய, முயற்சித்து வருகிறார், அப்பட இயக்குனர் சித்திக். அப்படி, ரஜினி கால்ஷீட் கொடுத்து விட்டால், அப்படத்திலும், நயன்தாரா தான் கதாநாயகி. இதனால், அவருக்கு அடிக்கப் போகும் அதிர்ஷ்டத்தை எண்ணி, மற்ற நடிகைகள் கடுப்பில் உள்ளனர்.— எலீசாகின்னஸ் சாதனை செய்த சோனாக் ஷி சின்ஹா!பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக் ஷி சின்ஹா. ரஜினியின், லிங்கா படத்தில், இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்த இவருக்கு, கின்னஸ் சாதனை புத்தகத்தில், இடம் பெற வேண்டும் என்பது, லட்சியம். அதனால், சமீபத்தில், மும்பையில், மகளிர் தினக் கொண்டாட்டத்தில், நெயில் பாலிஷ் போடும் நிகழ்ச்சியில் ஏராளமான பெண்களுடன் கலந்து கொண்டு, கின்னஸ் சாதனை செய்த பெண்மணியாக மாறியுள்ளார். அந்த வீடியோவை, தன் டுவிட்டரில் பதிவு செய்து, ரசிகர்களிடம் வாழ்த்து பெற்று வருகிறார். சூட்சுமத்தில் இருக்கிறது மோட்சம்.— எலீசா'மாஸ்' கதாநாயகனாகும் விஜய் ஆண்டனி!பிச்சைக்காரன் படத்தின், 'ஹிட்' காரணமாக, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மாஸ் கதாநாயகனாகி விட்டார். அதனால், தற்போது அவர் நடித்து வரும், சைத்தான் மற்றும் எமன் ஆகிய படங்களில், அவருக்கு, 'பில்டப்' கொடுத்து, ஓப்பனிங் காட்சிகளை உருவாக்கி வருகின்றனர். அத்துடன், பாடல் காட்சிகளில், மற்ற இளவட்ட நடிகர்களைப் போன்று, அதிரடி நடனமாட, தீவிர பயிற்சி எடுத்து வரும் விஜய் ஆண்டனி, காமெடி ஏரியாவிலும் கலக்கயிருக்கிறார்.— சினிமா பொன்னையாகறுப்பு பூனை!காக்கா முட்டை நடிகை, ஏறுமுகத்தில் செல்வதற்காக, சில மேல் தட்டு கதாநாயகர்களுக்கு தூண்டில் போட்டு வருகிறார். ஆனால், அவர் ரம்மி நடிகருடன் ஐக்கியமாகி விட்டதாக கருதி, நடிகைக்கு கதவு திறக்க, யோசித்து வருகின்றனர். இந்த சேதியை அறிந்த நடிகை, 'தனக்கும், அந்த நடிகருக்கும் இடையே இருந்து வந்த உறவு பாலம், உடைந்து ரொம்ப காலமாயிற்று...' என்று, மேற்படி நடிகர்களுக்கு தெளிவுபடுத்தி வருகிறார்.தாரா நடிகைக்கு, அங்காடி நடிகை போட்டியாகி விட்டதாக சிலர் கொளுத்திப் போட்டனர். ஆனால், அதற்கு ஜகா வாங்கி விட்டார் அங்காடி நடிகை. அத்துடன், 'சினிமாவில் யாரும், யாருக்கும் போட்டி இல்லை. படங்களின் வெற்றி தான் நடிகைகளின் வாழ்க்கையை தீர்மானிக்கிறது...' என்று கூறியுள்ளவர், கதாநாயகர்களின் சிபாரிசு இருந்தால், நீண்ட காலம் நீடிக்கலாம் என்ற தொழில் முறை ரகசியத்தையும், 'அவுட்' செய்துள்ளார்.சினி துளிகள்!* சந்தானம் நடித்து வரும், சர்வர் சுந்தரம் படத்தில், நிஜ சமையல் கலைஞர்களும் நடிக்கின்றனர்.* இறைவி படத்தில், பக்கா குடும்பப் பெண்ணாக நடித்து வருகிறார், அஞ்சலி.* அர்ஜுன் ராம்பால் நடிக்கும், ஒரு இந்தி படத்தில் நடிக்கிறார், காக்கா முட்டை ஐஸ்வர்யா ராஜேஷ்.* நகுல் நடிக்கும் புதிய படத்தில், ஆஞ்சல் என்ற பாலிவுட் நடிகை தமிழுக்கு இறக்குமதியாகிறார். இவர், ஆரக் ஷான் மற்றும் வி ஆர் பேமலி உட்பட பல இந்தி படங்களில் நடித்தவர்.* பிரேமம் படத்தில், டீச்சராக நடித்த சாய் பல்லவி, மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில், டாக்டர் வேடத்தில் நடிக்கிறார்.அவ்ளோதான்!