உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

பிரபுதேவாவின், 'ஹாலிவுட்' கனவு!தமிழ் சினிமாவில் புகழ் பெற்று, பின், இந்தியில் பிரபல இயக்குனராகி விட்ட பிரபுதேவாவுக்கு, அடுத்து, ஹாலிவுட்டில் படம் இயக்க வேண்டும் என்பது பெரிய கனவாக உள்ளது. அதுவும், ஹாலிவுட்டில் வெளியான, லார்ட் ஆப் தி ரிங்ஸ் படத்துக்கு இணையாக, மகாபாரத கதையை பிரமாண்டமாக இயக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். தற்போது, ஏ.எல்.விஜய் இயக்கத்தில், தேவி (எல்) என்ற படத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என, மூன்று மொழிகளில் நடித்து வருபவர், அதையடுத்து, ஹாலிவுட் பட முயற்சியில் இறங்கப் போவதாக கூறுகிறார்.— சினிமா பொன்னையாஇந்திக்கு செல்லும் நதியா!திருமணத்திற்கு பின், இளம் வயது அம்மாவாக, சண்டை மற்றும் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி போன்ற படங்களில் நடித்த நதியாவுக்கு, தொடர்ந்து நடிக்கும் ஆர்வம் மேலோங்கியுள்ளது. அதனால், 'சமுதாயத்தில், 40 வயது பெண்களுக்கு எவ்வளவோ பிரச்னைகள் உள்ளன; அம்மாதிரி பிரச்னைகளை மையமாக வைத்து படமெடுத்து, என்னை போன்ற முன்னாள் கதாநாயகிகளுக்கு வாய்ப்பு கொடுங்கள்...' என்று, தன் அபிமான இயக்குனர்களிடம் கேட்டு வருகிறார். அத்துடன், இந்திப் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்த நதியா, இந்தியில், நடுத்தர வயது நடிகைகளுக்கு நடிக்க, போதுமான வாய்ப்பு கிடைத்து வருவதால், தற்போது, சில இயக்குனர்களை அணுகி, வாய்ப்பு கேட்டு வருகிறார். காலம் போன காலத்தில் காய்ந்ததாம் பேய் சுரைக்காய்!— எலீசாஅனுஷ்கா - ஸ்ருதிஹாசனுக்கு அதிர்ச்சி கொடுத்த காஜல் அகர்வால்!பிரபல சினிமா நடிகைகளுக்கிடையே, இணையதளங்களில் ரசிகர்களிடம், யாருக்கு அதிகப்படியான, 'லைக்' கிடைக்கிறது என்ற போட்டியும் வெடித்துள்ளது. அவ்வகையில், இதுவரை அனுஷ்காவை விட ஸ்ருதிஹாசன் தான், இணையதள ரசிகர்களிடம், அதிக, 'லைக்' பெற்று வந்தார்; ஆனால், கடந்த சில மாதங்களாக அவர்களை முந்திச் சென்று விட்டார் காஜல் அகர்வால். தற்போது, அவரது இணைய பக்கத்தில், இரண்டு கோடி, 'லைக்'குகள் உள்ளன. இதைப் பார்த்து, அதிர்ச்சியடைந்த அனுஷ்கா மற்றும் ஸ்ருதிஹாசன் இணையப்பக்கத்தில், தங்களது விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்து, ரசிகர்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எத்தனை பேர் துடுப்புப் போட்டாலும், தோணி போவது சுக்கான் பிடிப்பவன் கையில் இருக்கிறது! — எலீசாசமந்தாவின் மார்தட்டல்!சமந்தா நடித்த தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில், இதுவரை, ஒன்பது படங்கள், அமெரிக்காவில் வெளியாகி, ஒன்பது மில்லியன் டாலர், 'கிளப்'பில் இணைந்துள்ளன. இந்நிலையில், சமீபத்தில், தெலுங்கில் அவர் நடித்த, எ ஏ என்ற படமும் அமெரிக்காவில் வெளியாகி, ஒரு மில்லியன் டாலர் வசூலித்துள்ளது. அவ்வகையில், இதுவரை, சமந்தா நடித்த படங்கள், அமெரிக்காவில், 10 மில்லியன் டாலர் வசூலித்துள்ளன. இச்சாதனை இதுவரை எந்த தென்னிந்திய நடிகைகளின் படங்களுக்கும் கிடைத்ததில்லை. இதை, சக நடிகைகளிடம் சொல்லி, மார்தட்டி வருகிறார் சமந்தா.— சினிமா பொன்னையாகறுப்பு பூனை!பப்ளிமாஸ் நடிகையின் கைவசம், ஒரேயொரு படம் மட்டும் தான் உள்ளது. இந்த படமும் ஓடவில்லை என்றால், அவரது மார்க்கெட் சுத்தமாக, 'அவுட்'டாகி விடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆனாலும், 'கோலிவுட்டில் இன்னொரு சுற்று வர வேண்டும்...' என்று ஆசைப்படும் நடிகை, முன்பு அதிகப்படியான சம்பளம் கேட்டு, தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வந்தவர், இப்போது, படக்கூலியை குறைத்து, தயாரிப்பாளர்களை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.கயல் நடிகைக்கும், தனக்குமான ரொமான்ஸ் ஒர்க் - அவுட்டாகி விட்டதால், அவருடன், மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளார், இசை நடிகர். ஆனால், நடிகர், ஒரே நடிகையுடன் தொடர்ந்து நடிப்பதால், அவர்களுக்குள் ஏதோ, 'கசமுசா' ஏற்பட்டிருக்குமோ என்று நடிகரின் இல்லத்தரசி, பெரும் கலவரத்தில் இருப்பதோடு, கணவனை உளவு பார்க்க துவங்கியுள்ளார்.சினி துளிகள்!* ரோமியோ ஜூலியட் படத்தை தொடர்ந்து, மீண்டும், போகன் படத்தில், ஜெயம் ரவியுடன் நடிக்கிறார் ஹன்சிகா.* எனக்கு இன்னொரு பேரு இருக்கு படத்தை அடுத்து, புருஸ்லீ என்ற படத்தில் நடிக்கிறார், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார்.அவ்ளோதான்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !