உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

ஜாக்கிசானுக்கு கவுரவ ஆஸ்கர் விருது!தற்காப்பு கலையை, சினிமாவில் பயன்படுத்தி, உலக அளவில் பிரபலமானவர் ஜாக்கிசான்; அதேபோன்று, உலகில், அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில், இரண்டாவது இடம் பிடித்துள்ள இவர், இதுவரை, ஒருமுறை கூட ஆஸ்கர் விருது வாங்கியதில்லை. இந்நிலையில், தற்போது, அவரை கவுரவப்படுத்தும் வகையில், டிச., 12ல் அவருக்கு, கவுரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட உள்ளது.— சினிமா பொன்னையாமீண்டும் நாயகியான சினேகா!நடிகர் பிரசன்னாவை, திருமணம் செய்த பின், உன் சமையல் அறையில் மற்றும் ஹரிதாஸ் போன்ற படங்களில் நாயகியாக நடித்தார், சினேகா. இந்நிலையில், ஒரு குழந்தைக்கு அம்மாவாகிய பின், அவருக்கு கதாநாயகியாக தொடர வேண்டும் என்ற ஆசை மேலோங்கியுள்ளது. அதன் காரணமாக, திருமணத்திற்கு முன் மலையாள நடிகர், மம்முட்டியுடன், பிரமாணி மற்றும் துருப்பு குலான் போன்ற மலையாள படங்களில் நடித்ததை தொடர்ந்து, தற்போது, ஒரு மலையாள படத்தில், மம்மூட்டியின் மனைவியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடு!— எலீசாஅமெரிக்க சீரியலில் நீது சந்திரா!யாவரும் நலம் படத்தில் நடித்த நீது சந்திரா, அதன்பின், ஜெயம் ரவியுடன் நடித்த, ஆதிபகவன் படத்தில், ஆக் ஷன் நாயகியாக நடித்தார். தற்போது, அமெரிக்க, 'டிவி' சீரியல் ஒன்றில், வில்லன்களை துவம்சம் செய்யும் அதிரடி பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'டேக்குவாண்டோ' என்ற சண்டை கலையில் நான்கு, 'பிளாக் பெல்ட்' வாங்கியிருப்பதை முன் வைத்தே, நீது சந்திராவுக்கு, இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. பட்டறை வாய்த்தால், பணி வாய்க்கும்!— எலீசாசிவாஜி பட தலைப்பில் விஜய்சேதுபதி மற்றும் விஷால்!சிவாஜி நடித்த, ஆண்டவன் கட்டளை பட தலைப்பில் வெளியாகவுள்ள படத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ளதை தொடர்ந்து, விஷாலும், சிவாஜி நடித்த, இரும்புத்திரை என்ற படத்தின் தலைப்பில், ஒரு படத்தில் நடிக்கிறார். இப்படத்தை மித்ரன் இயக்கயிருக்கிறார்.— சினிமா பொன்னையாகறுப்பு பூனை!முன்பு, மலையாள நடிகையுடன் காதல் கிசுகிசுவில் சிக்கியிருந்த இரண்டெழுத்து நடிகர், தற்போது, அங்காடி நடிகையுடன் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். கிட்டத்தட்ட அவர்களது காதல், கல்யாணத்தில் முடிவாகும் என்கின்றனர். நடிகர் தரப்பில், இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பிய போதும், பெற்றோரை சமாதானம் செய்யும் முயற்சியில், தீவிரமடைந்துள்ளார், நடிகர்.காக்காமுட்டை நடிகையை, பீட்சா நடிகர் கழட்டி விட்டதை அடுத்து, நல்ல கொழுகொம்பாக தேடுகிறார், நடிகை. ஆனால், நடிகை, மேற்படி நடிகருடன், மிக நெருக்கமாக இருந்த சமாசாரம், ஊரறிந்த ரகசியம் என்பதால், அம்மணி, தோழமையுடன் பேசினாலே, இளவட்டங்கள் நைசாக நழுவுகின்றனர். இருப்பினும், நடிகையின் திரைமறைவு முயற்சிகள் தொடர்கிறது.சினி துளிகள்!* வெங்கட்பிரபுவின், சென்னை - 28 படத்தின் இரண்டாம் பாகத்திலும், நாயகனாக நடிக்கிறார், ஜெய்.* இரண்டாம் தட்டு கதாநாயகர்களுடன் நடிக்க, தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார், ஐஸ்வர்யா ராஜேஷ்.* தன்னை வைத்து, திருடா திருடி படத்தை இயக்கிய சுப்ரமணியசிவாவிற்கு தன், வடசென்னை படத்தில், ஒரு வேடத்தில் நடிக்க, சிபாரிசு செய்துள்ளார் தனுஷ்.* சமீபத்தில், கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெற்ற கல்லூரி பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக, ஆவேசமாக பேசியுள்ளார், நடிகை பார்வதி மேனன்.* ஆர்யாவுடன், கடம்பன் படத்தில் நடித்து வரும் கேத்ரின் தெரசா, அடுத்து, உதயநிதியுடன் ஒரு படத்தில் இணைகிறார்.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !