இதப்படிங்க முதல்ல...
மோகன்லால் படம், 100 கோடி சாதனை!மலையாள சினிமா வரலாற்றில், இதுவரை, எந்தவொரு படமும், 100 கோடி ரூபாய் வசூல் செய்து, சாதனை செய்திராத நிலையில், கடந்த மாதம் வெளியான, மோகன்லால் நடித்த, புலிமுருகன் படம், அச்சாதனையை செய்துள்ளது. கேரளா மட்டுமின்றி, தென்னிந்தியா முழுக்க வெளியான அப்படம், தற்போது, வெளிநாடுகளிலும் திரையிடப்பட்டுள்ளது. இதனால், இதுவரை கேரளாவிற்குள்ளேயே குண்டு சட்டிக்குள் குதிரையோட்டி வந்த மலையாள சினிமாவும், தற்போது, உலக அளவில், பரந்து விரிய துவங்கியுள்ளது.— சினிமா பொன்னையா'டாப்லெஸ்' புகைப்படம் வெளியிட்ட பியா!சன்னிலியோன், எமிஜாக்சன் மற்றும் ராதிகா ஆப்தே உள்ளிட்ட பல நடிகைகள், இணைய பக்கத்தில், தங்களது, 'டாப்லெஸ்' புகைப்படங்களை வெளியிட்டதை தொடர்ந்து, ஏகன் மற்றும் கோ படங்களில் நடித்த பியா பாஜ்பாயும், தற்போது, தன், 'டாப்லெஸ்' புகைப்படமொன்றை வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார். அத்துடன், கதைக்கு அவசியப்பட்டால், அம்மாதிரி நடிக்கவும் தயாராக இருப்பதாக கூறியுள்ளார். கண்டதைக் கொண்டு கரை ஏற வேண்டும்!—எலீசாதமன்னா பாணிக்கு மாறும் சிருஷ்டி டாங்கே!ஹன்சிகா மற்றும் தமன்னாவை போன்று, மும்பையில் இருந்து தமிழுக்கு வந்தவர் சிருஷ்டி டாங்கே. 'குடும்ப பாங்கான வேடங்களில் தான் நடிப்பேன்...' என்று அடம் பிடித்து வந்த இவர், தற்போது, கவர்ச்சி கொடியேற்றிருக்கிறார். அதிலும், தமன்னாவையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு, படு கவர்ச்சியாக நடிக்க, தயாராக இருப்பதாக கமர்ஷியல் பட இயக்குனர்களுக்கு, இனிப்பு செய்தி வெளியிட்டுள்ளார். எல்லாரும் உலர்த்தினர் என்று எலியும் தன் வாலை உலர்த்தியதாம்!—எலீசாஎப்போதுமே, 'டாப்பு' தான்!மீண்டும் காமெடியனாக, ரீ -என்ட்ரியாகியுள்ள வடிவேலு, 'சில காலம், நடிப்பை விட்டு விலகியிருந்ததை பார்த்து, எனக்கு நடிக்க வாய்ப்பில்லாமல் இருந்ததாக நினைக்கின்றனர் சிலர்; ஆனால், உண்மை அதுவல்ல, நல்ல கதைகளுக்காகவே காத்திருந்தேன். இப்போது, பல படங்களில் நடிக்கிறேன். அவ்வகையில், எனக்கு, யாருமே, 'ஆப்பு' வைக்க முடியாது; நான், எப்போதுமே, 'டாப்பு' தான்...' என்கிறார்.— சினிமா பொன்னையாகறுப்பு பூனை!மெரீனா பட நடிகருடன் நடித்து, புகழ் பெற்ற ஸ்ரீ நடிகை, சமீபத்தில், நடிகரிடம் வாய்ப்பு கேட்க, நள்ளிரவு விழாவில் ஆஜரானார். ஆனால், நடிகைக்கு கம்பெனி கொடுக்காமல், அங்கு வந்திருந்த, வேறு சில அம்மணிகளுடன், நடிகர் குத்தாட்டம் போட்டதை பார்த்து, வெறுத்துப் போன நடிகை, செம அதிர்ச்சியுடன், அங்கிருந்து திரும்பி விட்டார்.தளபதி நடிகருடன் நடித்து விட்ட வாரிசு நடிகை, 'மேல்தட்டு நடிகர்களுக்கு மட்டும் தான் கால்ஷீட்' என்று போர்டு மாட்டி விட்டார். இதனால், அம்மணி தங்கள் படங்களில் நடிக்கவும் கால்ஷீட் தருவார் என்று எதிர்பார்த்திருந்த சில நடிகர்கள், 'அப்செட்'டாகி, நடிகையை பற்றி, அவதூறுகளை பரப்பி வருகின்றனர்.சினி துளிகள்* மாவீரன் கிட்டு படத்தில், துணிச்சலான பெண் வேடத்தில் நடித்திருக்கிறார், ஸ்ரீ திவ்யா* நயன்தாரா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட, தானா சேர்ந்த கூட்டம் படத்தில், தற்போது, கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.* தன் மகள் சவுந்தர்யா இயக்கும், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில், தனுஷை நடிக்க வைக்க, பரிந்துரை செய்துள்ளார், ரஜினி.* சர்வர் சுந்தரம் படத்தை தொடர்ந்து, ஓடி ஓடி உழைக்கணும் என்ற படத்தில் நடிக்கிறார், சந்தானம்.அவ்ளோதான்!