இதப்படிங்க முதல்ல....
சீனர்களை கவர்ந்த அமீர்கானின், தங்கல்!இந்தியில், அமீர்கான், மல்யுத்த வீரராக நடித்த, தங்கல் படம், சீன மொழியில், 'டப்' செய்யப்பட்டு, வெளியிடப்பட்டது. ஒரு தந்தை, தன் மகள்கள் மீது, அதீத நம்பிக்கை வைத்து, அவர்களை வெற்றியாளர்களாக மாற்றும் அந்த கதை, சீனர்களை பெரிய அளவில் கவர்ந்து விட, படத்திற்கு மிகப் பெரிய அளவில் வரவேற்பு கொடுத்துள்ளனர். அதனால், அப்படம் வெளியான, ஐந்து நாட்களில், 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.— சினிமா பொன்னையாதொழிலதிபராகும் அமலாபால்!விவாகரத்துக்கு பின், சினிமாவில் அதிரடி பிரவேசம் செய்ய முடிவெடுத்துள்ள நடிகை அமலாபால், கூடவே, 'பிசினஸ்' பெண்ணாகவும் உருவெடுக்க உள்ளார். சென்னையில், ஒரு ஓட்டல் துவங்க இருக்கிறார். அந்த ஓட்டலில், தியானம் மற்றும் யோகா சென்டர்களும் திறக்கப்பட உள்ளது. ஆசை பெருக அலைச்சலும் பெருகும்!— எலீசா.கேத்ரின் தெரசாவின் ஆயுர்வேத சிகிச்சை!கடம்பன் படத்தில், காட்டுவாசி பெண்ணாக நடித்த, கேத்ரின் தெரசா, உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க, தினமும், உடற்பயிற்சி செய்து வருவதோடு, பாஸ்ட் புட் மற்றும் இனிப்பு உணவுகளை சுத்தமாக தவிர்த்து வருகிறார். இதற்கெல்லாம் மேலாக, தன் உடம்பை இளமையாக வைத்திருக்க, மாதம் ஒருமுறை, ஆவி குளியல் மற்றும் ஆயுர் வேத மசாஜ் போன்ற சிகிச்சைகளையும் கடைப்பிடிக்கிறார். சுவர் இருந்தால் தானே சித்திரம் தீட்ட!— எலீசா.பிரபாசுக்கு ராஜமவுலி கொடுத்த பரிசு!பாகுபலி இரண்டாம் பாகத்திற்காக, 600 நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடித்துள்ளார், தெலுங்கு நடிகர், பிரபாஸ். அவ்வகையில், பாகுபலி மற்றும் பாகுபலி இரண்டாம் பாகத்திற்காக, ஐந்து ஆண்டுகள் கடுமையாக உழைத்திருக்கும் அவரை பாராட்டி, அப்படத்தில், அவர் அணிந்து நடித்த கவசங்களை, அவருக்கு பரிசாக கொடுத்துள்ளார், அப்பட இயக்குனரான ராஜமவுலி.— சி.பொ.,வசனமே பேசாமல் நடித்த ஜெயம்ரவி!வனமகன் படத்தில், ஆதிவாசியாக நடித்துள்ள ஜெயம்ரவி, இப்படத்திற்காக, 15 கிலோ எடை குறைத்து, உடல் மெலிந்திருப்பதுடன், வசனம் பேசாமல், படம் முழுக்க, ரியாக் ஷன் கொடுத்து நடித்துள்ளார்.— சி.பொ.,அர்ஜுனின், 150வது படம்!தமிழகத்தை உலுக்கிய ஒரு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள, நிபுணன் படத்தில், நாயகனாக நடித்துள்ளார், அர்ஜுன்; இது, அவரது, 150 படம். ஒரு சாதனையாளனின் வாழ்க்கை கதையில் தயாராகியுள்ள இப்படத்தை, தமிழ் மட்டுமின்றி, தன் தாய்மொழியான கன்னடத்திலும் பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளார், அர்ஜுன்.— சினிமா பொன்னையாகறுப்பு பூனை!மெட்ராஸ் நடிகையுடன், ஒரு படத்தில் நடித்துள்ள, 'பிக்கப்' நடிகர், வெளிநாட்டிலுள்ள காடுகளில் படப்பிடிப்பு நடந்த போது, நடிகைக்கு நேசக்கரம் நீட்டினார்; ஆனால், நடிகரின் வில்லங்க புத்தியை, ஏற்கனவே அறிந்திருந்த நடிகை, நடிகரை நெருங்கவே விடவில்லை. இக்கோபத்தை மனதில் வைத்து, வேண்டுமென்றே, 'உடம்புக்கு முடியவில்லை...' என்று, படப்பிடிப்புக்கு செல்லாமல், சில நாட்கள், 'டேக்கா' கொடுத்து, நடிகையை குறித்த நாளில், அப்படப்பிடிப்பை முடித்து, வேறு படப்பிடிப்புக்கு செல்ல விடாமல், டென்ஷன் செய்து விட்டார், நடிகர்.அட்டகத்தி நடிகையை, புதுப்பேட்டை இயக்குனர், தன் புதிய படத்தில், படுக்கையறை காட்சிகளில் நடிக்க வைத்துள்ளார். அதில், நடிகையுடன் நடித்த, குஷி பட இயக்குனர், குஷி மூடில் களமிறங்கி, அம்மணியின், 'இமேஜை' கெடுக்கும் வகையில், அவரை, 'பிட்' பட நடிகை ரேஞ்சுக்கு தோலுரித்து விட்டுள்ளார். இதனால், மேற்படி படத்தில், அதிகம் நெருக்கம் காட்டும் காட்சிகளை கத்தரித்து, தன், 'இமேஜை' காப்பாற்றும்படி, இயக்குனரிடம் மன்றாடுகிறார், நடிகை.சினி துளிகள்!* வணங்காமுடி படத்தில், போலீஸ் வேடத்தில் நடித்து வருகிறார், நடிகை நந்திதா.* கடம்பன் படத்தை அடுத்து, சந்தனத்தேவன் படத்தில் நடித்து வருகிறார், நடிகர் ஆர்யா.அவ்ளோதான்!