இதப்படிங்க முதல்ல...
வி.சி.குகநாதன் இயக்கும் 250வது படம்!எம்.ஜி.ஆர்., சிவாஜி காலம் தொட்டே படம் இயக்கி வரும் வி.சி.குகநாதன், தற்போது, இனி சிந்தாது இந்திய ரத்தம் என்ற படத்துக்கு கதை, வசனம் எழுதுகிறார். இது, அவரது 250வது படம். சித்தர்களும், புத்தர்களும் பிறந்த இந்த பாரத பூமியில் நிகழும் சோகங்களையும், அவலங்களையும் மையமாக வைத்து, இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. — சினிமா பொன்னையா.நமீதா அடுத்த இலக்கு!இளைஞன் படத்தில், கவர்ச்சி கலந்த வில்லியாக நடித்த நமீதா, படையப்பாவில், ரம்யா கிருஷ்ணன் நடித்தது போன்ற அதிரடி வேடத்தில் நடிக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார். மேலும், 'கமல் போன்ற நடிகர்களின் படங்களில் சிறிய ரோல் என்றாலும், என் மனத் திருப்திக்காக நடிக்க ஆசைப்படுகிறேன்...' என்று சொல்லி, அடுத்தடுத்து மேற்படி நடிகர்களை வைத்து படம் இயக்குவதாக கூறப்படும் டைரக்டர்களை சந்தித்து, சான்ஸ் கேட்டு வருகிறார். ஆசை இருக்கிறது தாசில் பண்ண... அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க! — எலீசா.அசின் அதிரடி கொள்கை!'எவ்வளவு பெரிய ஹீரோக்களின் படமாக இருந்தாலும், இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடிக்க மாட்டேன்...' என்று பாலிவுட்டுக்கு அறிக்கை விட்டுள்ளார் அசின். அதுமட்டுமின்றி, படத்துக்குப் படம் கூலியை உயர்த்துவது, கிளாமரை அடக்கி வாசிப்பது உள்பட சில தனிப்பட்ட கொள்கைகளையும் கடைபிடித்து வரும் அசின், அடுத்து, காவலன் இந்திப் படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்கிறார். அரைத்தவளுக்கு ஆட்டுக்கல், சுட்டவளுக்குத் தோசைக்கல். — எலீசா.நரேன் ஆக்ஷன் ஆர்வம்சித்திரம் பேசுதடி, அஞ்சாதே படங்களில் நடித்த நரேன், தம்பிக்கோட்டை படத்திலிருந்து முழு ஆக்ஷன் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்துள்ளார். 'இனி, நடிக்கப் போகும் படங்களிலும் ஆக்ஷன் ஹீரோவாகவே நடிப்பேன்...' என்று சொல்லும் நரேன், தான் எதிர்பார்க்கிற அடிதடி கதைகள் கிடைப்பதற்கு வருடக்கணக்கில் ஆனாலும், காத்திருந்து நடிக்கப் போவதாக கூறுகிறார்.— சி.பொ.,பேராசைப்படும் அஞ்சலி!'உங்களது சினிமா லட்சியம் என்ன?' என்று, அஞ்சலியைக் கேட்டால், 'மூன்றாம் பிறை ஸ்ரீதேவி மாதிரி, ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும்...' என்று சொல்கிறார். 'எனக்கு பிறகு சினிமாவுக்கு வரும் நடிகைகள், அஞ்சலி நடித்த மாதிரியான வேடத்தில், நானும் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படக்கூடிய வகையில், யாருமே நடித்திராத புதுமையான வேடங்களில் நிறைய நடிக்க வேண்டும் என்ற பேராசையும் எனக்கு உள்ளது...' என்கிறார். —எலீசா.தனுஷின் ஆக்ஷன் படம்!இதுவரை தனுஷ் நடித்த படங்களில் அடிதடி இருந்தாலும், காதல், காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பார். ஆனால், தற்போது, ஹரி இயக்கத்தில் நடித்து வரும், வேங்கை படத்தில், அதிரடி ஆக்ஷனில் இறங்கியுள்ளார் தனுஷ். அந்த வகையில் இப்படம் ஆக்ஷன் பாதி, சென்டிமென்ட் பாதி கலந்த கலவையாக இருக்கும் என்கிறார். — சி.பொ.,அவ்ளோதான்!