இதப்படிங்க முதல்ல...
துப்பாக்கி சுடும் பயிற்சியில், அஜீத்குமார்!நடிகர் அஜீத்குமார், சினிமா தவிர, கார், 'பைக் ரேஸ்' வீரர் என்பது, அனைவருக்கும் தெரியும். அதோடு, ஆள் இல்லாத, சிறிய ரக விமானங்களை பறக்க விடுவதிலும் ஆர்வம் கொண்டவர். அதனால் தான், 'ஏரோநாடிகல்' மாணவர்களுக்காக, ஆள் இல்லாத விமானங்களை பறக்க விடும் பயிற்சி கொடுக்க, 'தக் ஷா' என்னும் குழுவை உருவாக்கி, அதில் ஆலோசகரானார். மேலும், துப்பாக்கி சுடுவதிலும் ஆர்வம் கொண்டவரான, அஜீத், தற்போது, அதற்கான பயிற்சியும் எடுத்து வருகிறார்.— சினிமா பொன்னையாசினிமாவில் களமிறங்கிய, அருண்பாண்டியனின் வாரிசு!ஊமை விழிகள் மற்றும் இணைந்த கைகள் உட்பட, பல படங்களில் நடித்தவர், அருண் பாண்டியன். தற்போது, அவர், வினியோகஸ்தராகி விட்டார். இந்நிலையில், அவரது மகள், கீர்த்தி பாண்டியன், பேண்டஸி என்ற படத்தில், நாயகியாக அறிமுகமாகிறார். 'சல்சா மற்றும் பாலே' நடன கலைஞரான, கீர்த்தி, மேடை நாடகங்களில் நடித்து வந்தார். 'தொடர்ந்து நல்ல கதைகளில் மட்டும் நடித்து, அப்பாவின் பெயரை காப்பாற்ற வேண்டும் என்பதே, என் லட்சியம்...' என்கிறார்.- சி.பொ.,நயன்தாராவுக்கு அதிர்ச்சி!தற்போது, கதையின் நாயகி மட்டுமின்றி, ரஜினி மற்றும் விஜய் என, முன்னணி நடிகர்களுடன் நடித்து வருபவர், நயன்தாரா. அதோடு, கடந்த ஆண்டு வரை, ரசிகர்களால் அதிகமாக கவரப்பட்ட நடிகை பட்டியலில் இருந்த, நயன்தாரா, இந்த ஆண்டு, இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். காரணம், கடந்த ஆண்டில், வடசென்னை மற்றும் கனா படங்களில் நடித்த, காக்கா முட்டை, ஐஸ்வர்யா ராஜேஷ், ரசிகர்களால் அதிகம் கவரப்பட்ட நடிகையாகி, முதலிடம் பிடித்து விட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த, நயன்தாரா, இந்த ஆண்டு நடித்து வரும் படங்கள் மூலம், தனக்கான முதலிடத்தை கைப்பற்றி விட, தீவிரம் காட்டி வருகிறார். —எலீசாத்ரிஷாவின் ஆசை நிறைவேறியது!தனுஷுடன், கொடி படத்தில் முதன் முதலாக வில்லியாக நடித்த, த்ரிஷா, அதன்பின், கர்ஜனை என்ற படத்தில், 'ஆக் ஷன் ஹீரோயின்' ஆக நடித்தார்; அந்த படம் கிடப்பில் கிடக்கிறது. 'ஆக் ஷன் ஹீரோயினி' ஆக, சினிமாவை கலக்க வேண்டும் என்ற, தன் ஆசை நிறைவேறவில்லையே என்ற, வருத்தத்தில் இருந்தார், த்ரிஷா. இந்நிலையில், எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய, சரவணனின் புதிய படத்தில், 'ஆக் ஷன் ஹீரோயினி' ஆக நடிக்கப் போகிறார். இந்த படத்தில், 'ஹாலிவுட்' நடிகையருக்கு இணையாக சண்டை செய்ய வேண்டும் என்பதற்காக, 'ஹாலிவுட் பைட் மாஸ்டர்' ஒருவரை வைத்து, சண்டை பயிற்சி எடுக்கப் போகிறார். ஆசை பெருக, அலைச்சலும் பெருகும்!— சினிமா பொன்னையாகறுப்புப்பூனை!* மெரினா நடிகர் நடித்த சில படங்கள், தோல்வி அடைந்ததை அடுத்து, மார்க்கெட்டை பிடிக்கும் உத்வேகத்தில் இறங்கியிருக்கிறார். அதோடு, மெகா நடிகையருடன் ஜோடி சேர்ந்து, தன் மார்க்கெட்டை, 'ஸ்டெடி' செய்ய வேண்டும் என்பதற்காக, தாரா நடிகையை, ஒரு படத்திற்கும், ஸ்பைடர் நடிகையை, இன்னொரு படத்திற்கும் ஒப்பந்தம் செய்ய விரும்பினார். ஆனால், மேற்படி அம்மணிகள், பெரிய சம்பளம் கேட்க, அதற்கு தயாரிப்பாளர்கள் தயங்கியபோது, தன் சார்பில் ஒரு தொகையை அவர்களுக்கு, 'வெட்டி' அந்த படங்களில் ஒப்பந்தம் செய்துள்ளார், நடிகர்.'தம்பி... சிவகார்த்தி, தோல்வி வந்தா, துவண்டு விடக் கூடாது... ஜெயிக்கிறதுக்கான வழியை தேடணும்...' என்றார், பேராசிரியர்.-* தான் நடிக்கும் படங்களில் ஆபாசமாக தோன்றி வரும் அந்த, 'லிப்லாக்' நடிகை, சமீபத்தில், ஒரு கல்லுாரி விழாவுக்கும், படு ஆபாசமாக உடையணிந்து சென்றிருக்கிறார். இதனால், அம்மணியை பார்க்க, இளைஞர் படை கூடியிருக்கிறது. அவரது, ஆபாச புகைப்படம் சமூக வலைதளத்தில், வெளியானதை பார்த்த, 'நெட்டிசன்'கள், அம்மணியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால், அவர்கள் அளவுக்கு இறங்கி சென்று, தானும் பதிலுக்கு பதில் ஆபாச வார்த்தைகளால், அவர்களை திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார், நடிகை.'ஏண்டி... ஆண்ட்ரியா, 'எலக் ஷன் மீட்டிங்'குக்கு, கூப்பிடறாங்களே... போலாமா?' என்று கேட்டாள், தோழி.சினி துளிகள்!* அட்லி இயக்கத்தில், தான் நடிக்கும், 63வது படத்தில், மைக்கேல் என்ற கேரக்டரில் நடிக்கிறார், விஜய்.* ராஜேஷ்.எம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள, மிஸ்டர் லோக்கல் படத்தில், நாயகியாக நடித்துள்ளார், நயன்தாரா.* ஆண்ட்ரியா நடித்து வரும், கா என்ற படம், வனத்துறை சம்பந்தப்பட்ட கதையில் உருவாகிறது.அவ்ளோதான்!