இதப்படிங்க முதல்ல...
'சஸ்பென்ஸ்' வைத்த, விஜய்!தன்னிடம், எந்த இயக்குனர், கதை சொல்ல வந்தாலும், கேட்டு வைத்துக்கொள்வார், ரஜினி. அந்த கதைகளில் எப்போது நடிக்க விரும்புகிறாரோ, அப்போது அந்தந்த இயக்குனர்களுக்கு, அழைப்பு விடுப்பார். அதே பாணியை, இப்போது, விஜயும் பின்பற்றுகிறார். அந்த வகையில், தற்போது, தன், 64வது படத்தில் நடித்து வரும், விஜய், அடுத்து, 65வது படத்தில் நடிப்பதற்கு, வெற்றிமாறன், மகிழ் திருமேனி மற்றும் அட்லி உட்பட ஐந்து இயக்குனர்களிடம், கதை கேட்டுள்ளார். இவர்களில் ஒருவரை தான், 65வது படத்தை இயக்க, அழைப்பு விடுக்கப் போகிறார். அதனால், இந்த ஐந்து இயக்குனர்களுமே, 'அடுத்து, யாரை அழைக்கப் போகிறாரோ...' என்று, 'சஸ்பென்ஸ்' மூடில், விஜயின் போன் அழைப்புக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.— சினிமா பொன்னையாரஜினியுடன் வரிந்து கட்டும், குஷ்பு!ரஜினி நடிக்கும், 168வது படம் மூலம், மீண்டும் கலை சேவையில் இறங்கியுள்ள, குஷ்பு, அரசியலில் பலதரப்பட்ட நபர்களுடன் மோதலில் ஈடுபட்டு, பழுத்த அரசியல்வாதியாகி விட்டார். அதனால் தான், இந்த படத்தில், அவருக்கு, எவ்வளவு அடித்தாலும் தாங்கும் வில்லி வேடம் கொடுத்துள்ளார், சிறுத்தை சிவா. இதற்கு முன், ரஜினியுடன், 'ரொமான்ஸ்' செய்த குஷ்பு, இந்த படத்தில், வில்லியாக வெளுத்து கட்டுகிறார்; அதுவும், அரசியல்வாதியாகவே நடிக்கிறார்.போயும் வந்தும் பொன்னம்பலம்; திரும்பி வந்தும் திருவம்பலம்.— எலீசாஐந்து கணவர் கேட்கும், ரித்திகா சிங்!நிஜ குத்துச்சண்டை வீராங்கனையான, நடிகை, ரித்திகா சிங், சமீபத்தில், ரசிகர்களின் கேள்விக்கு, 'இன்ஸ்டாகிராமில்' பதிலளித்தார். அப்போது, ஒரு ரசிகர், 'உங்களை, திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன்...' என்று கூறினார். அதற்கு, 'வாழ்க்கையில், ஒரு ஐந்து பேரையாவது திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். அதோடு, நான், ஐந்து பேரை திருமணம் செய்து கொள்ள, குடும்பத்தினர் தடுத்தால், திருமணமே செய்து கொள்ள மாட்டேன். இது பொய் அல்ல, உண்மை...' என்று கூறியுள்ளார். ஏண்டா இப்படியொரு கேள்வி கேட்டோம் என்று நினைக்கும் அளவுக்கு, அவருக்கு, அதிர்ச்சிகரமான பதிலை கொடுத்து விட்டார், ரித்திகா சிங். முடங்கப் பாய் இல்லாமல் போனாலும், சடங்குக்குக் குறைச்சல் இல்லை.— எலீசா'கோலிவுட் ஹீரோ'க்களை மிரட்டிய, அண்ணாச்சி!சரவணா ஸ்டோர், 'லெஜன்ட்' அருள் சரவணன் நடிக்கும், பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு துவங்கி விட்டது. இது, அவருக்கு, முதல் படமாக இருந்தபோதும், 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரிக்கும் அவர், ஒரு பாடலை படமாக்கவே, 10 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார். இது, ரஜினி மற்றும் விஜய் படங்களின் பாடல்களுக்கு செய்யும் செலவாகும். முதல் படத்திலேயே, 'லெஜன்ட்' சரவணன் செய்யும், இந்த அமர்க்களத்தை பார்த்து, 'கோலிவுட் ஹீரோ'க்கள் மலைத்து போயுள்ளனர்.— சினிமா பொன்னையாகறுப்புப்பூனை!பிரமாண்ட இயக்குனரின், இரண்டாம் பாகம் படத்தில், நிகழ்கால அரசியல் குளறுபடிகளை சகட்டுமேனிக்கு வைத்து, ஆளும் கட்சிகளுக்கு, 'செம அட்டாக்' கொடுத்திருக்கிறார். இதனால், படம் திரைக்கு வரும்போது, மாநில அளவில் மட்டுமின்றி, தேசிய அளவிலும், அரசியல் வட்டாரங்களில் சலசலப்பு ஏற்படும் என்று, மனதளவில் கலவரத்தில் இருக்கிறார். இந்த நேரத்தில், எரியுற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றிய கதையாய், அப்படத்தில் நடித்து வரும், உலக நடிகரும், பாய்ஸ் நடிகரும், ஆளும் கட்சிகளுக்கு எதிராக, குரல் கொடுத்து வருவதால், செம கடுப்பில் இருக்கிறார், பிரமாண்டம். அதையடுத்து, 'ஏற்கனவே, படம், திரைக்கு வரும்போது, அரசியல் பஞ்சாயத்து உள்ளது. அதை, அப்போது சமாளித்துக் கொள்ளலாம் என்று பார்த்தால், அதற்குள்ளாக, அரசியல் ரீதியாக, பெரிய பிரச்னையை, இப்போதே நீங்கள் உருவாக்கி வைத்து விட்டால், படம் திரைக்கு வருவதே கேள்விக்குறியாகி விடும்...' என்று, மேற்படி நடிகர்களுக்கு, வாய் பூட்டு போடுமாறு, உத்தரவு போட்டுள்ளார், பிரமாண்டம்.'சார்... இந்த கமலக்கண்ணனையும், சித்தார்த்தையும், மாணவர் தலைவராகவும், துணை தலைவராகவும் தேர்ந்தெடுத்தது, தப்பா போச்சு... ெஹட்மாஸ்டர் பேச்சை கேட்காம, தன்னிச்சையா முடிவு செய்து, தான்தோன்றித்தனமா செயல்படறாங்கப்பா... இதை இப்படியே வளர விட்டா, 'ஸ்கூல்' பேரையே கெடுத்துடுவாங்க... ரெண்டு தட்டு தட்டி, வாய் பேசாம இருக்க செய்யணும்...' என்று, தமிழ் வாத்தியாரிடம் புலம்பினார், இன்னொரு வாத்தியார். சினி துளிகள்!*'இளவட்டங்களுடன் தான் நடிப்பேன்...' என்று அடம் பிடித்த, கேத்ரின் தெரசா, தற்போது, '60 வயது, கதாநாயர்கள் என்றாலும், 'டூயட்' பாட நான் தயார். ஆனால், கோடிகளை தாராளமாக வெட்ட வேண்டும்...' என்று, தயாரிப்பாளர்களிடம், கோரிக்கை வைத்து வருகிறார்.* இந்தியன் - 2 படத்தில், கமலும், சித்தார்த்தும், அப்பா- - மகனாக நடிப்பதாக, செய்திகள் வெளியாகி உள்ளன.அவ்ளோதான்!