உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

டாப் கியர் போட்ட, எஸ். ஜே. சூர்யா!விஜயுடன், மெர்சல், சிம்புவுடன், மாநாடு படங்களில் வில்லனாக நடித்து, பிரபலமாகி விட்டார், எஸ்.ஜே.சூர்யா. இதையடுத்து, பிரபலமில்லாத சில நடிகர்கள், அவருடன் நடித்து, தங்களைப் பிரபலப்படுத்திக் கொள்ள துாது விட்டனர். ஆனால் அவரோ, 'டாப் ரேஞ்ச் ஹீரோகளுடன் மட்டுமே நடிப்பேன்...' என்று சொல்லி, விஷால், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களின் படங்களில் வில்லனாகி இருக்கிறார். அதோடு, தன் படக் கூலியையும், 'ஹீரோ'கள் ரேஞ்சுக்கு உயர்த்தியுள்ளார். — சினிமா பொன்னையாவிஜயை, 'கேட்ச்' பண்ணிய, ராஷ்மிகா மந்தனா!தமிழில் நடித்த முதல் படம், ராஷ்மிகா மந்தனாவுக்கு, 'பிளாப்' ஆகிவிட்டதால், அடுத்தபடியாக, விஜயின், மாஸ்டர் படத்தை அவரால் கைப்பற்ற முடியவில்லை. என்றாலும், 'அடுத்து, விஜய் படம் மூலம்தான் கோலிவுட்டில், 'என்ட்ரி' கொடுப்பேன்...' என்று அடம் பிடித்து வந்தார், ராஷ்மிகா மந்தனா. தற்போது, தெலுங்கில் விஜய், 'என்ட்ரி' கொடுக்கும், 66வது படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை, 'கேட்ச்' பண்ணி விட்டார். அதிலும் அந்தப் படம், தமிழ், தெலுங்கு என, இரண்டு மொழிகளில் தயாராவதால், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளார்.வழி ஆச்சுது; காரியம் வெளி ஆச்சுது!— எலீசாதனுஷின் மலையாள, 'சென்டிமென்ட்!'தனுஷுடன் நயன்தாரா, அமலாபால், பார்வதி, நஸ்ரியா, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், மஞ்சு வாரியர், ரஜிஷா விஜயன் மற்றும் மாளவிகா மோகனன் என, பல மலையாள நடிகையர் நடித்துள்ளனர். இந்நிலையில், தமிழ், தெலுங்கில், தனுஷ் நடித்து வரும், வாத்தி படத்தில், அவருக்கு ஜோடியாக இன்னொரு மலையாள நடிகை, சம்யுக்தா மேனன் இணைந்திருக்கிறார். 'எனக்கு ஜோடியாக மலையாள நடிகையர் நடிக்கும் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதால், அந்த, 'சென்டிமென்ட்' தெலுங்கிலும் தொடர வேண்டும் என்பதற்காகவே, இந்த மலையாள நடிகைக்கு சிபாரிசு செய்திருக்கிறேன்...' என்கிறார்.— சி.பொ.,கடலுக்கடியில் நீச்சலடிக்கும், நிக்கி கல்ராணி!டார்லிங் படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமான, நிக்கி கல்ராணி, சில நடிகையரை போன்று கடலில் நீந்தி குளிப்பதற்காக மாலத்தீவுக்கு செல்வதில்லை. மாறாக, இந்தியாவில் உள்ள கடலுக்குள்ளேயே நீச்சல் அடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அதாவது, 'ஸ்கூபா டைவிங்' வீரர்களைப் போல, நிக்கி கல்ராணி ஆக்சிஜன் சிலிண்டர்களை வைத்து ஆழமான கடல் பகுதிக்குள் நீந்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார். 'அப்படி தண்ணீருக்குள் நான் செல்லும் போது, அங்கு நீந்திக் கொண்டிருக்கும் மீன்கள் கூட்டத்தோடு சேர்ந்து நீந்துவது, மிகப்பெரிய ஆனந்தத்தையும், ஒரு புதிய உலகத்துக்குள் சென்று விட்ட பிரமிப்பையும் ஏற்படுத்துகிறது. மேலும், இதுபோன்று கடலுக்குள் நான் நீந்துவதை வழக்கமாக வைத்திருக்கிறேன்...' என்கிறார். கற்றது சொல்வான்; மற்று என்ன செய்வான்!— எலீசாமழுப்பலாக பேசும், நயன்தாரா!சிம்பு மற்றும் பிரபுதேவாவை காதலித்த, நயன்தாரா, அந்த இரண்டு காதலையும் முறித்து, தற்போது, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். ஆனால், ஐந்து ஆண்டுகளாக காதலித்தபோதும் திருமணமே செய்து கொள்ளாதவர்கள் அடிக்கடி வெளிநாடுகளுக்கு, 'ஜாலி டூர்' சென்று வருகின்றனர். அதைப் பார்க்கும் சினிமா அபிமானிகள், 'இப்படியே ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருந்தால், எப்போது திருமணம் செய்து, குழந்தை குட்டி பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள்?' என்று, நயன்தாராவை பார்த்து, கேள்வி எழுப்பினர். அதற்கு, 'எங்க கல்யாணம் எப்ப நடக்கும், எப்படி நடக்கும்ன்னு தெரியாது. ஆனா, நடக்க வேண்டிய நேரத்துல கரெக்டா நடக்கும். இப்பத்தான் போயஸ்கார்டன்ல புதுசா வீடு வாங்கி இருக்கோம். கூடிய சீக்கிரமே குடி போய் விடுவோம். அதுக்கு அப்புறம் கல்யாணம்தான், கச்சேரி தான்...' என்று கூறியுள்ளார். கத்தரிக்காய்க்கு கால் முளைத்தால், கடைத்தெருவுக்கு வந்தால் தெரிகிறது! — எலீசாதுவண்டு போகாத, அதர்வா!அதர்வா நடிக்கும் படங்கள், தொடர்ந்து, 'ப்ளாப்' ஆகி வருவதால், அவருக்கு, அடுத்தடுத்து வாய்ப்பு தருவதாக சொன்ன இயக்குனர்களே கைவிரித்து விட்டனர். இதனால், 'இதுபோன்ற நேரங்களில், 'நெகடீவ் ரோல்'களில் நடித்து, மார்க்கெட்டை துாக்கி நிறுத்தலாமே...' என்று, சிலர் அதர்வாவுக்கு, 'ஐடியா' கொடுக்க, அதை நிராகரித்து விட்டார். 'கஷ்ட காலத்தை காரணம் காட்டி, 'ரூட்'டை மாற்றினால், அதன்பிறகு நிரந்தர வில்லனாக்கி விடுவர். விடாமுயற்சி, கண்டிப்பாக ஒருநாள் வெற்றியை கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன், 'பாசிட்டீவ்' ஆன வேடங்களை மட்டுமே, ஓ.கே., பண்ணி வருகிறேன்...' என்கிறார். — சினிமா பொன்னையாசினி துளிகள்!கவுதம்மேனன் இயக்கத்தில், சிம்பு நடித்து வரும், வெந்து தணிந்தது காடு படத்தில், சித்தி இட்னானி என்ற குஜராத் நடிகை நாயகியாக நடிக்கிறார்.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !