உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

வெற்றியை தரும், எதிர்மறை விமர்சனங்கள்!ரஜினியின் கேரியரில் அவர் நடித்த, பாட்ஷா முக்கியமான படம். இதில், மாணிக்கம் என்ற கேரக்டரில் நடித்த, ரஜினி, பாட்ஷா என்ற தன் நண்பன் கொல்லப்பட்டதையடுத்து, மாணிக் பாட்ஷாவாக உருவெடுப்பார்.தற்போது, லால் சலாம் படத்தில், மொய்தீன்பாய் என்ற இஸ்லாமியராகவே, ரஜினி நடித்து வரும் நிலையில், அந்த, 'கெட் - அப்' குறித்த புகைப்படங்கள் வெளியாயின. இதையடுத்து, அதற்கு எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால், ரஜினியோ, 'நான் நடிக்க துவங்கிய காலத்தில் இருந்தே, எதிர்மறையான விமர்சனங்கள் தான், எனக்கு பலமுறை வெற்றியை தேடிக் கொடுத்துள்ளன. 'அதனால், மொய்தீன்பாய் கேரக்டருக்கு தற்போது எழுந்துள்ள விமர்சனங்களை நினைத்து, நான் கவலைப்படவில்லை. இந்த படம், கண்டிப்பாக வெற்றி பெற்று, எனக்கு நல்ல பெயரை வாங்கித் தரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது...' என்கிறார்.— சினிமா பொன்னையாமலையாள, 'சென்டிமென்ட்!' தான் நடித்த படங்களில், நயன்தாரா, பார்வதி, அமலாபால், கீர்த்தி சுரேஷ், மடோனா ஜெபஸ்டியன், மஞ்சு வாரியர், ரஜிஷா விஜயன், நித்யா மேனன் மற்றும் சம்யுக்தா மேனன் என, பல மலையாள நடிகையரை, தனக்கு ஜோடியாக்கியுள்ளார், தனுஷ்.தற்போது தான் இயக்கி நடிக்க இருக்கும், 50வது படத்திலும், கண்டிப்பாக மலையாள,' சென்டிமென்ட்' தொடர வேண்டுமென்று, பல முன்னணி மலையாள நடிகையரிடத்தில் பேச்சு நடத்தி வந்தார்.அந்த வகையில், சூரரைப் போற்று படத்தில் நடித்த, அபர்ணா பாலமுரளியை ஒப்பந்தம் செய்துள்ளார், தனுஷ். தற்போது, அவருக்கு பெரிதாக மார்க்கெட் இல்லை. இருப்பினும், 'என்னுடன் மலையாள நடிகையர் நடித்த அனைத்து படங்களும் எனக்கு, 'ஹிட்'டாக அமையும் என்பதால், அந்த, 'சென்டிமென்டு'க்காக, அபர்ணாவை ஒப்பந்தம் செய்துள்ளேன்...' என்கிறார், தனுஷ்.சி.பொ., ஆண்ட்ரியாவின் ஆர்வம்!சினிமாவில் நடிகை, பின்னணி பாடகி என, இரண்டு முகம் காட்டி வருகிறார், ஆண்ட்ரியா. அதோடு, பிரபல இசையமைப்பாளர்களைப் போன்று அவரும், வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.'விரைவில், கோயம்புத்துாரில், 'லைவ்' இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளேன். இந்நிகழ்ச்சியில், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற இசையமைப்பாளர்களின், 'ஹிட்' பாடல்கள் மட்டுமின்றி, மற்ற இசையமைப்பாளர்களின் இசையில், நான் பாடிய,'ஹிட்' பாடல்களையும் பாடுவதற்கு திட்டமிட்டுள்ளேன்...' என்கிறார், ஆண்ட்ரியா.— சினிமா பொன்னையாகறுப்புப்பூனை!வம்பு நடிகர், எப்போதுமே தன்னுடன், 'டூயட்' பாடும் நடிகையரை, 'கரெக்ட்' பண்ணுவதில் பலே கில்லாடி. அதன் காரணமாகவே, அவர், தன் வீட்டில் தங்காமல், ஹோட்டலில் தான் எப்போதும் இருந்து வருகிறார். இதன் காரணமாக, குடி, குடித்தனம் என்று, தன் இமேஜையும் கெடுத்துக் கொண்டார்.இந்நிலையில், 'சினிமா மார்க்கெட் சூடு பிடித்துள்ள நேரத்தில், மீண்டும் அம்மணிகளுடன் குஜாலா பண்ணிக் கொண்டிருந்தால், கேரியர் வீணாகி விடும்...' என்று, அவரது தந்தைகுலம், வம்புக்காரருக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார். அதோடு, மகனின் மனநிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக, சமீபத்தில், தன் இல்லத்தில், ஒரு கிரக தோஷ பரிகார பூஜையும் நடத்தியுள்ளார், தாடிக்காரர். சினி துளிகள்!* விஜயின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஆகிவிட்ட, அனிருத், தற்போது, லியோ படத்திற்கு இசை அமைத்திருப்பதோடு, அப்படத்தில், ஒரு கவுரவ வேடத்திலும் நடித்துள்ளார்.* இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர், அறிமுகமான, விருமன் படத்திலேயே ஒரு பாடல் பின்னணி பாடியவர், தற்போது, அவர் நடித்திருக்கும் மாவீரன் படத்திலும், ஒரு பாடல் பின்னணி பாடி இருக்கிறார்.* கவுதம்மேனனைத் தொடர்ந்து, சில முன்னணி பட இயக்குனர்களை சந்தித்து, தன்னை வைத்து படம் இயக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார், சிம்பு.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !