உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

'ஹீரோ'களின், 'பேவரிட்' வில்லனான, பகத் பாசில்!புஷ்பா படத்தில், வில்லனாக நடித்து, புகழ்பெற்றார், மலையாள நடிகர், பகத் பாசில். அதையடுத்து தமிழில், மாமன்னன் படத்திலும் வில்லனாக நடித்து, பெரிய அளவில், 'ரீச்'சாகி விட்டார். அதனால், அடுத்தடுத்து, அவரை வில்லனாக நடிக்க வைக்க, படையெடுக்க துவங்கினர், இயக்குனர்கள்.இந்நிலையில், மாமன்னன் படத்தில், பகத் பாசிலின் நடிப்பை பார்த்த, ரஜினிகாந்த்தும், தன், 170வது படத்தில், அவரை வில்லனாக்குமாறு, உத்தரவு போட்டுள்ளார். இப்படி, மேலும் பல, 'ஹீரோ'களும், தங்கள் படங்களில், பகத் பாசிலை வில்லனாக நடிக்க வைக்க சிபாரிசு செய்துள்ளனர்.— சினிமா பொன்னையா குணசித்ர நடிகரான, 'மைக்' மோகன்!கடந்த, 1980 - 90களில், வெற்றி பட நாயகனாக வலம் வந்தவர், நடிகர் மோகன். நீண்ட இடைவெளிக்கு பிறகு, ஹரா என்ற படத்தில், கதாநாயகனாக மீண்டும், 'என்ட்ரி' கொடுத்தார். ஆனால், அந்த படம், இன்னும் திரைக்கு வரவில்லை.தற்போது, விஜய் நடிக்கும், 68வது படத்தில், முக்கிய கேரக்டரில் நடிக்கும், மோகன், 'அடுத்தபடியாக, குணசித்ர வேடங்களில் நடிப்பதற்கும் தயாராக இருக்கிறேன்; வில்லன் வேடம் என்றாலும் பரவாயில்லை...' என, இளவட்ட இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டுள்ளார்.— சினிமா பொன்னையாமீண்டும், பூஜா ஹெக்டே!மிஷ்கின் இயக்கிய, முகமூடி படத்தில் அறிமுகமானவர், மும்பை நடிகையான, பூஜா ஹெக்டே. ஆனால், முதல் படமே தோல்வி அடைந்தது. அதன் பின், 10 ஆண்டுகளுக்குப் பின், மீண்டும், தமிழில், விஜயுடன், பீஸ்ட் படத்தில் நடித்தார். இந்த படமும் அவருக்கு தோல்வியாக அமைந்து விட்டது.பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன், அல்லு அர்ஜுனை வைத்து இயக்கும் படத்தில், மீண்டும் பூஜா ஹெக்டேவே, 'ஹீரோயின்' ஆக நடிக்க வைக்கப் போகிறார்.தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என, மூன்று மொழிகளிலும், பூஜா ஹெக்டேக்கு, ரசிகர்கள் இருப்பதால், இந்த படத்துக்கு அவரை ஒப்பந்தம் செய்ததாக கூறுகிறார், நெல்சன். — எலீசாகறுப்புப் பூனை!திருமணத்துக்கு பிறகு, சில படங்களில், கேரக்டர் ரோல்களில் நடித்து வந்த, ரன் நடிகை, தன் அபிமான, 'ஹீரோ'களை சந்தித்து, தன்னை கை துாக்கி விடுமாறு கோரிக்கை வைத்தார். ஒரு காலத்தில் அம்மணியை விழுந்து விழுந்து கவனித்த மேற்படி நடிகர்களோ, இப்போது அவரைக் கண்டு கொள்வது இல்லை.இதன் காரணமாக செம கடுப்பானவர், தற்போது ஒரு படத்தில், கதையின் நாயகியாக களம் இறங்கி இருக்கிறார். இந்த படத்தை, 'சூப்பர் ஹிட்'டாக கொடுத்து, அடுத்து தென்னிந்திய சினிமாவை கலக்குவதோடு, தன், 'மாஜி ஹீரோ'களின் படங்களோடு, கதையின் நாயகியாக தான் நடிக்கும் படங்களையும் இறக்கி விட்டு, போட்டி கோதாவில் குதிக்கவும் சபதம் எடுத்துள்ளார், ரன் நடிகை. சினி துளிகள்!* வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிக்கும், 68வது படத்தில், அவருக்கு ஜோடியாக, பிரியங்கா மோகன் மற்றும் மீனாட்சி சவுத்ரி ஆகிய இருவரும் ஒப்பந்தமாகி உள்ளனர்.* புதுப்புது அர்த்தங்கள் மற்றும் புது வசந்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த, சித்தாரா, தற்போது, சன்னிதானம் பி.ஓ. என்ற படத்தில், யோகி பாபுவுக்கு, அம்மாவாக நடிக்கிறார்.* சிம்ரன் நடிக்கும், 50-வது படத்திற்கு, சப்தம் என, பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை, அறிவழகன் இயக்குகிறார்.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !