இதப்படிங்க முதல்ல...
'டைம் டிராவல்' கதையில், விஜய்!லியோ படத்தை அடுத்து, வெங்கட் பிரபு இயக்கும் தன், 68வது படத்தில் நடித்து வருகிறார், விஜய். இப்படத்தில், 50 வயது மற்றும் 25 வயது என, இரண்டு விதமான வேடங்களில் நடிக்கிறார்.இந்த படம், 'டைம் டிராவல்' கதையில் உருவாகிறது. அதாவது, காலம் கடந்து செல்லும் போது, இளமையான வேடத்தில் விஜய் தோன்றுகிறார். அவரது தோற்றத்தை, ஏ.ஐ., என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இளமையாக்கி இருக்கின்றனர்.இதற்கு முன், சிம்பு நடிப்பில் மாநாடு படத்தை, 'டைம் லுாப்' முறையில் இயக்கிய வெங்கட் பிரபு, இந்த படத்தை, 'டைம் டிராவல்' கதையில் படமாக்குகிறார்.— சினிமா பொன்னையாபுதிய, 'ரூட்' போடும், கீர்த்தி சுரேஷ்!தமிழ் சினிமாவுக்கு வந்த புதிதில், சில முன்னணி, 'ஹீரோ'களின் வீடு வரை சென்று, அவர்களின் மனைவியரிடம் நட்பு வளர்த்து, பட வாய்ப்புகளை தட்டி துாக்கி வந்தார், கீர்த்தி சுரேஷ். தற்போது, முன்னணி, 'ஹீரோ'கள் அவரை ஓரங்கட்டி வருவதால், முன்னணி இயக்குனர்கள் பக்கம் சாய்ந்திருக்கிறார். அந்த வகையில், அட்லி உள்ளிட்ட மேல்தட்டு இயக்குனர்களின் வீடு வரை சென்று, அவர்களின் குடும்ப தோழியாகி வருகிறார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட இயக்குனர்களின் மனைவியரே, கீர்த்தி சுரேஷுக்கு, தங்களது கணவரிடம் சிபாரிசு செய்ய துவங்கியுள்ளனர். அந்த வகையில், இந்த புதிய, 'ரூட்' கீர்த்தி சுரேஷுக்கு, பெரிய அளவில், 'ஒர்க் - அவுட்' ஆகி வருகிறது.— எலீசாஅதிரடி காட்டும், அனிருத்!தமிழ் சினிமா மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும், இசையமைத்து வரும் அனிருத், படத்துக்கு படம், தன் சம்பளத்தை உயர்த்தி வருகிறார்.அதன்படி, விஜயின், லியோ படத்திற்கு இசையமைக்க, எட்டு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியவர், ரஜினியின், 171வது படத்துக்கு, 10 கோடி ரூபாய் சம்பளம் பேசி இருக்கிறார். அடுத்த படத்திற்கு, 12 கோடி ரூபாயாக்க திட்டமிட்டுள்ளாராம்.இப்படி, படத்துக்கு படம், பல கோடி ரூபாய்களை, அனிருத் சொல்லி அடித்து வருவதால், அடுத்தடுத்து அவரை, 'புக்' பண்ணியிருக்கும், கோலிவுட் தயாரிப்பாளர்கள் பதட்டத்தில் உள்ளனர்.— சினிமா பொன்னையாபிரியங்கா மோகனின் ஆர்வம்!சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்த டாக்டர், டான் என்ற இரண்டு படங்களுமே 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது. இதனால், அவருடன் அடுத்தடுத்து நடிக்க, ஆர்வமாக இருக்கிறார், பிரியங்கா மோகன்.தங்கள் இருவருக்கும் இடையே அந்த படங்களில் நல்லதொரு, 'கெமிஸ்ட்ரி, ஒர்க் - அவுட்'டாகி இருந்தது. அது இளவட்ட ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.அதன் காரணமாகவே, அடுத்தடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களில் அவருடன் டூயட் பாட ஆர்வமாக இருப்பதாக, அவரை வைத்து படம் இயக்கும் இளவட்ட இயக்குனர்களுக்கு துாது விட்டுள்ளார், பிரியங்கா மோகன்.— எலீசாகறுப்பு பூனை!ஆன்மிகவாதி என்று சொல்லி, இன்னொரு பக்கம் தன்னுடன், 'டூயட்' பாடும் அம்மணியருடன் குஜாலாக இருக்கிறார், வம்பு நடிகர். அப்படி நடிக்கும் அம்மணியரை, பல மாதங்களுக்கு வாடகை எடுத்து, தன் ஹோட்டல் அறையிலேயே வைத்து, குடும்பம் நடத்துகிறார்.இதனால், அவருடன் நடிக்கும் நடிகையரை, அதன்பிறகு, எந்த, 'ஹீரோ'களும் சீண்டுவதில்லை. அடுத்தபடியாக தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் வேற்று மொழிகளுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டு விடுகிறது. இதையடுத்து, இந்த நடிகருடன் நடித்தால், தங்களது மொத்த மார்க்கெட்டும் போய் விடும் என்பதால், வம்பு நடிகருடன் நடிக்க வேண்டும் என்றாலே, தெறித்து ஓடுகின்றனர், இளவட்ட நடிகையர்.சினி துளிகள்!* 'ஒரே நேரத்தில், பல படங்களில் நடிப்பதை விடுத்து, இனிமேல், ஒரு படத்தில் நடித்து முடித்த பிறகு தான் அடுத்த படம்...' என்ற, பாலிசிக்கு மாறி இருக்கிறார், சிம்பு.* சில படங்களின் அதிர்ச்சி தோல்விகளால், படங்கள் இயக்குவதை கைவிட்டு, மீண்டும் நடிகரானார், பிரபுதேவா. தற்போது, சல்மான் கான் நடிக்கும், ஹிந்தி படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார்.அவ்ளோதான்!