உள்ளூர் செய்திகள்

பணம் பாதாளம் வரை பாய்ந்தாலும்.

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர், முகமது நிஷாம்; கோடீஸ்வரரான இவர், குடிபோதையில், தன் வீட்டு காவலாளியை அடித்து, காரை மோதவிட்டு, கொடூரமாக கொலை செய்ததற்காக, தற்போது சிறையில் உள்ளார்.இவர் மீது, 16 வழக்குகள் இருந்தாலும், பணத்தின் மூலம் அதிகாரிகளை கைக்குள் போட்டு, வழக்குகளிலிருந்து தப்பித்து விடுவர்.இவரிடம், 56 கோடி ரூபாய் மதிப்புள்ள, 16 வெளிநாட்டு ஆடம்பரக் கார்கள் உள்ளன. அத்துடன், தன் ஏழு வயது மகன் மூலம், 'பெராரி' காரை சாலையில் இயக்க வைத்து, பரபரப்பு ஏற்படுத்தினார். இச்செய்தி பத்திரிகையில் வெளிவந்த போது, அதை விசாரிக்க வந்த பெண் போலீஸ் அதிகாரியை, காருக்குள் வைத்து, பூட்டி விட்டார். இவ்வழக்கையும் போலீசார் அமுக்கி விட்டனர்.காவலாளி கொலை வழக்கில், போலீசார் அவரை அழைத்து சென்ற போது, 'அவனை மிதித்த இந்த ஷூவின் விலை என்ன தெரியுமா... அஞ்சு லட்சம் ரூபா...' என்று பெருமை பேசியிருக்கிறார்.பணத்தாசை படைத்த அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இருப்பதால், காவலாளியின் இறுதி பேச்சு பதிவு செய்யப்படவில்லை. காவலாளி அணிந் திருந்த ரத்தக்கறை படிந்த சட்டை கூட, போலீசாரால் மறைக்கப்பட்டது.இதையெல்லாம் அங்குள்ள பத்திரிகைகள் அம்பலப்படுத்திய பின்னரே, போலீஸ் நடவடிக்கை எடுத்து, தற்போது இவரை சிறையில் அடைத்துள்ளது.— ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !