உள்ளூர் செய்திகள்

கால்பந்து மவுசு கூடியது!

கிரிக்கெட் விளையாட்டையே, ரசிகர்கள் அதிகம் விரும்பி வரும் நிலையில், ஐரோப்பியர்கள், கிரிக்கெட்டை ஓரம் கட்டி, கால் பந்து விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மேலும், உலக கால் பந்து வீரர்களுக்கு, பல கோடி ரூபாய் சன்மானமாக வழங்கப்படுகிறது.ஸ்பெயினில் செயல்படும், 'ராயல் மேட்ரிட்' என்ற கிளப், கால்பந்து விளையாட்டை பிரபலமடைய செய்வதில் முன்னணியில் இருக்கிறது. போர்த்துகீசை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ என்பவர் தான், மிக பிரபலமான கால்பந்து விளையாட்டு வீரராக இருக்கிறார். தங்கள் கிளப்புக்காக விளையாட, இவருக்கு வழங்கப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா? 800 கோடி ரூபாய்!இந்த கிளப், இவரை போன்று, வேறு பல பிரபல விளையாட்டு வீரர்களையும், 'பண வலை' வீசி பிடித்துள்ளது.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !