உள்ளூர் செய்திகள்

ஆடு, நாயிடம் பால் குடிக்கும் புலி!

'புலி பசித்தாலும், புல்லை தின்னாது' என்பது பழமொழி; ஆனால், புலி குட்டி ஒன்று, தன் பசியை ஆடு, நாயிடம் பால் குடித்து தணித்துக் கொள்கிறது.இந்த அதிசய சம்பவம், சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷான்டாங் மாகாணத்தில், வீ பாங் என்ற ஊரில் உள்ள மிருக காட்சி சாலையில் நடக்கிறது. மார்ச் மாதம், 25ம் தேதி, இந்த மிருக காட்சி சாலையில் ஒரு பெண் புலி, குட்டி போட்டது. 'சின்லீ' என அந்த பெண் புலிக் குட்டிக்கு பெயர் சூட்டப்பட்டது. இந்த குட்டிக்கு அதன் தாய் புலி, பால் கொடுக்க மறுத்து விட்டது. தாயிடம் பால் குடிக்க வந்தாலே, அந்த குட்டியை, தாய் புலி விரட்டி விடுகிறது.குட்டிப் புலியை காப்பாற்ற என்ன வழி என்று யோசித்த மிருககாட்சி சாலை டாக்டர்கள், உடனே, பால் கொடுக்கும் நிலையில், வேறு ஏதாவது மிருகங்கள் இருக்கிறதா என பார்த்தனர். அப்போதுதான், குட்டி போட்டு இருந்த ஆடு, நாய் ஆகியவை மிருக காட்சி சாலையில் இருந்தன. இந்த புலிக் குட்டியை தூக்கி சென்று, பால் குடிக்க வைத்தனர் அதிகாரிகள். நாயிடமும், ஆட்டிடமும் மாறி, மாறி பால் குடிக்கிறது புலிக் குட்டி.பிறந்த போது, 1.8 கிலோ எடை இருந்த புலிக்குட்டி, இப்போது, 3 கிலோவாகி விட்டது. நாயிடம் பால் குடிக்கும் புலிக் குட்டியை, அதிசயத்துடன் பார்த்து செல்கின்றனர் பார்வையாளர்கள்.— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !