உள்ளூர் செய்திகள்

இமயமலை இவருக்கு பிரியம்!

கேரள மாநிலம், கோழிக்கோடு அருகில் உள்ள உள்ளேரி என்ற ஊரைச் சேர்ந்தவர், நரேந்திரன்; இவரது ஒரே பொழுது போக்கு, இமயமலை ஏறுவது தான். கடந்த, 40 ஆண்டுகளில், 400 முறை இமயமலை ஏறியுள்ளார். 22 வயதில் துவங்கிய இந்த இமய மலைப் பயணம், இப்போதும் தொடர்கிறது. இதில், 18 முறை கைலாசத்தை சுற்றி வந்துள்ளார். 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்து, அரபு நாடுகளில் ஒன்றான கத்தார் நாட்டின் தலைநகரான தோகா சென்று, டாக்சி ஓட்டுனராக பணியாற்றிய இவருக்கு, 17 மொழிகள் பேசத் தெரியும். இப்போது, சுற்றுலா பயணியரை இமயமலை அழைத்துச் செல்லும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !