உள்ளூர் செய்திகள்

ஏழைகளுக்கு உணவளிப்பதே இவரது கடமை!

கேரளா மாநிலம், கொச்சியை சேர்ந்தவர் ஜூட்சன், வயது, 50; ஆட்டோ ஓட்டுனரான இவர், கடந்த, 18 ஆண்டுகளாக, ஏழைகளுக்கு உணவு அளித்து வருகிறார். தன், 21வது வயதில், மருத்துவமனை ஒன்றில் ஓட்டுனராக பணி புரிந்த காலத்தில், ஒருநாள், சாலையில் செல்லும் போது, யாரோ தன்னை அழைக்கும் குரல் கேட்டு, அருகில் சென்று பார்த்தார். பசியால் துவண்டு கிடந்த முதியவர் ஒருவர், 'என்னிடம் சிறிது பணம் இருக்கு; அதை கொடுத்தும் ஓட்டலில் உணவு தர மறுத்துட்டாங்க. எனக்கு சாப்பாடு வாங்கித் தர முடியுமா...' என்று கேட்டுள்ளார். அவருக்கு உணவு வாங்கி கொடுத்தார் ஜூட்சன். இச்சம்பவத்துக்கு பின், சாலையில் சுற்றித் திரியும் ஏழைகளுக்கு, தன்னால் முடிந்த அளவில், உணவளித்து வருகிறார்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !