சிவப்புதான் இவருக்கு பிடிச்ச கலரு!
தென் கிழக்கு ஐரோப்பிய நாடான போஸ்னியாவில் உள்ள ப்ரிஷ் என்ற சிறிய நகரத்தில் வசிப்பவர், ஜோரிகா ரெபர்னிச், 67. இவருக்கு சிறு வயதில் இருந்தே, சிவப்பு நிறம் மீது ஒருவித மயக்கம். 18 வயதான பின், இவரது நடவடிக்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. தன்னைச் சுற்றிள்ள இடங்கள், தன்னைச் சார்ந்த இடங்கள் எல்லாம், சிவப்பாக இருக்கும்படி பார்த்துக் கொண்டார். திருமணமான பின்னும், தன் கணவர் அனுமதியுடன், சிவப்பு நிற மயக்கத்தை தொடர்ந்தார். வீடு, படுக்கை, சாப்பிடும் தட்டு என, இவரது வீட்டில் உள்ள அனைத்தும் சிவப்பு நிறம் தான். இவரது வீட்டு தோட்டத்தில் சிவப்பு ரோஜாவுக்கு மட்டுமே இடம் உண்டு. தலைமுடிக்கு கூட, சிவப்பு நிற சாயம் தான் பூசியுள்ளார்.'சிவப்பு நிறம் மீது, ஏன் இவ்வளவு காதல்...' என, கேட்டால், 'காரணம் எல்லாம் சொல்ல தெரியலைங்க...' என, அப்பாவியாக சிரிக்கிறார். — ஜோல்னாபையன்