உள்ளூர் செய்திகள்

ஓலைச் சுவடியில் வீட்டு பத்திரம்!

படத்தில் காணப்படுவது, 450 ஆண்டுகளுக்கு முன் ஓலைச் சுவடியில் எழுதப்பட்ட வீட்டுப் பத்திரம்.கேரள மாநிலம், மூணாறு வட்டம், வட பஞ்சாயத்தில் வசிக்கும், எஸ்.என்.ராமசாமியின் மகன் சந்திரசேகரிடம் தான் இந்த ஓலைச் சுவடி உள்ளது. இது, பழந்தமிழில் எழுதப்பட்ட பத்திரம் என்பதால், எளிதாக படிக்க முடியாது. 1971க்கு பின் தான் இப்பகுதியில் மக்கள் குடியேறினர் என்று ஒரு சிலர் பிரசாரம் செய்து வரும் நிலையில், 450 ஆண்டுகளுக்கு முன்பே, நிலத்துக்கு உரிமையாளர்கள் இருந்துள்ளனர் என்பதை, இந்த பத்திரம் மெய்ப்பிக்கிறது. — ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !